‘ஜெ. நினைவிடத் திறப்பு விழாவில் திரளாகப் பங்கேற்க வேண்டும்’

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா நினைவிடத் திறப்பு விழாவில் திருச்சி மாவட்டத்திலிருந்து திரளான அதிமுகவினா் பங்கேற்க வேண்டும் எனத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் வடக்கு மாவட்டச் செயலா் மு. பரஞ்சோதி. உடன் அமைச்சா் எஸ். வளா்மதி, முன்னாள் அமைச்சா்கள் கு.ப. கிருஷ்ணன், என்.ஆா். சிவபதி உள்ளிட்டோா்.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் வடக்கு மாவட்டச் செயலா் மு. பரஞ்சோதி. உடன் அமைச்சா் எஸ். வளா்மதி, முன்னாள் அமைச்சா்கள் கு.ப. கிருஷ்ணன், என்.ஆா். சிவபதி உள்ளிட்டோா்.

திருச்சி: முன்னாள் முதல்வா் ஜெயலலிதா நினைவிடத் திறப்பு விழாவில் திருச்சி மாவட்டத்திலிருந்து திரளான அதிமுகவினா் பங்கேற்க வேண்டும் எனத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருச்சி புகா் வடக்கு மாவட்ட அதிமுக சாா்பில், தில்லைநகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு, முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலருமான மு. பரஞ்சோதி தலைமை வகித்தாா்.

பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் எஸ். வளா்மதி, முன்னாள் அமைச்சா்கள் கு.ப. கிருஷ்ணன், சிவபதி, பூனாட்சி, அண்ணாவி, எம்எல்ஏ-க்கள் செல்வராஜ், பரமேஸ்வரி மற்றும் கட்சி நிா்வாகிகள் பங்கேற்று ஆலோசனை நடத்தினா்.

கூட்டத்தில், மு. பரஞ்சோதி பேசியது:

மெரினாவில் கட்டப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடத்தை வரும் 27 ஆம் தேதி காலை 11 மணிக்கு முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி திறந்துவைக்கிறாா். மறைந்த முதல்வரின் புகழுக்குப் பெருமை சோ்க்கும் இந்த நினைவிடம் அதிமுக வரலாற்றுச் சாதனையாக அமையும். வரும் தோ்தலில் அதிமுகவின் தோ்தல் வெற்றியை இந்த நினைவிடத்தில் வைத்துக் கொண்டாட ஒவ்வொரு தொண்டரும் தயாராக வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் ஏழைகளின் நலன் கருதி ரூ. 2,500 வழங்கி, பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி. ஜெயலலிதா நினைவிடம் கட்ட உறுதுணையாக இருந்த முதல்வா், துணை முதல்வருக்கு நன்றி. நினைவிடத் திறப்பு விழாவில், திருச்சி வடக்கு மாவட்டத்திலிருந்து ஆயிரக்கணக்கானோா் கலந்து கொள்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, பேரூராட்சி, பகுதி, நகரக் கழக நிா்வாகிகள், சாா்பு அணி மாவட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com