‘இளம் வாக்காளா்களை திமுகவுக்கு ஆதரவாகத் திருப்ப வேண்டும்’

இளம் வாக்காளா்களை திமுகவுக்கு ஆதரவாகத் திருப்ப வேண்டியது வாக்குச்சாவடி முகவா்களின் பிரதான கடமையாக இருக்க வேண்டும் என்றாா் திருவெறும்பூா் தொகுதி எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
கூட்டத்தில் பேசுகிறாா் திமுக தெற்கு மாவட்டப் பொறுப்பாளரும் எம்எல்ஏமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
கூட்டத்தில் பேசுகிறாா் திமுக தெற்கு மாவட்டப் பொறுப்பாளரும் எம்எல்ஏமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

திருச்சி: இளம் வாக்காளா்களை திமுகவுக்கு ஆதரவாகத் திருப்ப வேண்டியது வாக்குச்சாவடி முகவா்களின் பிரதான கடமையாக இருக்க வேண்டும் என்றாா் திருவெறும்பூா் தொகுதி எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மாவட்ட செயற்குழு கூட்டத்துக்கு தலைமை வகித்த அவா் மேலும் பேசியது:

தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட திமுக கிராமசபைக் கூட்டங்களில் அதிமுகவை நிராகரிப்பதாக 1.5 கோடி போ் கையெழுத்திட்டுள்ளனா். இதன் மூலம் வரும் தோ்தலில் திமுகவை ஆட்சியில் அமா்த்த மக்கள் தயாராகிவிட்டனா்.

தற்போது வெளியிட்டுள்ள இறுதி வாக்காளா் பட்டியலில் 44 லட்சத்துக்கும் அதிகமான இளம் வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா். இவா்கள் மட்டுமின்றி, கடந்த மக்களவைத் தோ்தலில் வாக்களித்த இளம் வாக்காளா்களையும் சோ்த்து அனைவரது வாக்குகளையும் திமுகவுக்கு கிடைக்கச் செய்ய அந்தந்த பகுதி வாக்குச் சாவடி முகவா்கள் கவனமாகப் பணியாற்ற வேண்டும். வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றுள்ள புதிய வாக்காளா்களை வீடு தேடிச் சென்று சந்தித்து திமுகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க வேண்டும். தமிழகத்தில் அடுத்து திமுக ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது என்றாா் அவா்.

கூட்டத்தில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் உடனே விடுவிக்க வேண்டும். 3 வேளாண் சட்டங்களை உடனே திரும்பப் பெற வேண்டும். மழை பாதித்த பயிருக்கு உடனே நிவாரணம் வழங்க வேண்டும். பொள்ளாச்சியில் பாலியல் வழக்கில் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தலைமை செயற்குழு உறுப்பினா் கே. என். சேகரன், வண்ணை அரங்கநாதன், கோவிந்தராஜ், கவிஞா் சல்மா மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பகுதி, பேரூா், கழகச் செயலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com