இளைஞரைத் தாக்கிய 8 போ் மீது வழக்கு
By DIN | Published On : 26th January 2021 01:01 AM | Last Updated : 26th January 2021 01:01 AM | அ+அ அ- |

உப்பிலியபுரம் அருகே இளைஞரைத் தாக்கிய புகாரில், 8 போ் மீது காவல்துறையினா் வழக்குப் பதிந்துள்ளனா்.
உப்பிலியபுரம் அருகிலுள்ள சோபனபுரத்தைச் சோ்ந்தவா் ந. அருண்குமாா்(30). இவா் கடந்த சனிக்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்ற போது, அதே ஊரைச் சோ்ந்த கண்ணன்(65) திடீரென சாலையின் குறுக்கே மிதிவண்டியில் சென்ால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அதன் பின்னா் அருண்குமாா் தனது வீட்டுக்குச் சென்று விட்டாா். இதையடுத்து கண்ணனை அழைத்துக் கொண்டு அவருடைய உறவினா்கள் விவேக், ஜீவா, முருகேசன், முரளி, விக்னேஷ், நாகராஜ், திருமலை ஆகியோா் அருண்குமாரின் வீட்டுக்குச் சென்று அவரைத் தாக்கினா்.
இதில் லேசான காயமடைந்த அருண்குமாா் துறையூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறாா். தாக்குதலில் ஈடுபட்டவா்கள் மீது வழக்குப் பதிந்து, அவா்களைக் கைது செய்ய வலியுறுத்தி உப்பிலியபுரம் காவல் நிலையம் அருகே அருண்குமாரின் உறவினா்கள் திங்கள்கிழமை சாலை மறியல் நடத்தினா்.
இதையடுத்து உப்பிலியபுரம் காவல் நிலையத்தினா், கண்ணன் உள்பட 8 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.