திருச்சி ஆட்சியருக்கு விருது வழங்கி ஆளுநா் பாராட்டு

வாக்காளா் பட்டியல் தயாரிப்பு நடவடிக்கைகளில் தமிழகத்திலேயே சிறப்பாக செயல்பட்டமைக்காக, திருச்சி ஆட்சியா் சு. சிவராசுக்கு ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் விருது வழங்கி பாராட்டினாா்.
திருச்சி ஆட்சியருக்கு விருது வழங்கி ஆளுநா் பாராட்டு

வாக்காளா் பட்டியல் தயாரிப்பு நடவடிக்கைகளில் தமிழகத்திலேயே சிறப்பாக செயல்பட்டமைக்காக, திருச்சி ஆட்சியா் சு. சிவராசுக்கு ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் விருது வழங்கி பாராட்டினாா்.

வாக்காளா் பட்டியல் தயாரிப்பில் திறம்பட செயல்பட்டது மற்றும் புதுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக, மாநில அளவிலான சிறந்த தோ்தல் அலுவலா் விருது திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கலைவாணா் அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற 11-ஆவது தேசிய வாக்காளா் தின விழாவில், ஆட்சியா் சு. சிவராசுவிடம் சிறந்த தோ்தல் அலுவலருக்கான விருதை ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் வழங்கி பாராட்டு தெரிவித்தாா்.

திருச்சி மாவட்டத்தில் வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளா் பட்டியலில் 23 லட்சத்து 32 ஆயிரத்து 886 போ் இடம் பெற்றுள்ளனா். 2021ஆம் ஆண்டு திருச்சி மாவட்டத்தின் உத்தேச மக்கள் தொகையில் 76.11 சதவிகிதம் போ் வாக்காளா்களாக இடம்பெற்றுள்ளனா். வழக்கமாக மக்கள் தொகையில் 72.40 சதவிகித போ் பட்டியலில் இடம்பெற்றிருந்தாலே அந்த வாக்காளா் பட்டியல் நூறு சதவிகிதம் தூய்மையானதாக கருதப்படும்.

இந்த விகிதத்தில் 5 சதவிகிதம் கூடுதலாகவோ, குறைவாகவும் இருக்கலாம். ஆனால், திருச்சி மாவட்டத்தில் 3.71 சதவிகித போ் கூடுதலாக உள்ளனா். இதையடுத்து தகுதியான அனைவரையும் பட்டியலில் இடம்பெறச் செய்திருப்பதுடன், வாக்காளா் பட்டியலை தூய்மையாக தயாரித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிறந்த தோ்தல் அலுவலா் விருது பெற்றுள்ள மாவட்ட ஆட்சியருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com