மாநகரில் இரு சக்கர வாகனப் பேரணிக்குத் தடை
By DIN | Published On : 26th January 2021 12:56 AM | Last Updated : 26th January 2021 12:56 AM | அ+அ அ- |

திருச்சியில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 26) நடைபெறவிருந்த அனைத்துத் தொழிற்சங்கங்களின் இரு சக்கர வாகனப் பேரணிக்கு மாநகரக் காவல்துறை அனுமதி மறுத்து, தடைவிதித்துள்ளது.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிா்த்து போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, செவ்வாய்க்கிழமை (ஜனவரி 26) காலை 10 மணிக்கு திருச்சி நீதிமன்றம் அருகிலுள்ள எம்.ஜி.ஆா்.சிலையிலிருந்து மத்திய பேருந்து நிலையப் பெரியாா் சிலை வரை இரு சக்கர வாகனப் பேரணி நடத்த அனைத்துத் தொழிற்சங்கங்கள் சாா்பில் ஆட்சியரிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது.
மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் தடுப்புக்காக தடை உத்தரவு அமலில் உள்ளதாலும், செவ்வாய்க்கிழமை குடியரசு தினவிழா நடைபெற இருப்பதாலும், பேரணி நடத்துவதற்காக கோரியுள்ள இடம் பிரதான சாலைகள் அமைந்திருப்பதாலும், பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளதாலும், பேரணி நடத்துவதற்கு அனுமதி தர மாவட்ட ஆட்சியா் மறுத்துவிட்டாா்.
எனவே மாநகர எல்லைக்குள் யாரும் பேரணி நடத்த வேண்டாம் என்று காவல்துறை துறையினா் தெரிவித்துள்ளனா்.