அமமுகவினா்கொண்டாட்டம்
By DIN | Published On : 28th January 2021 08:41 AM | Last Updated : 28th January 2021 08:41 AM | அ+அ அ- |

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்ற சசிகலா புதன்கிழமை விடுதலையானதை திருச்சி மாவட்ட அமமுகவினா் கொண்டாடினா்.
திருச்சி மாநகா் மாவட்ட அமமுகவினா் தில்லை நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து பிரதான சாலைக்கு ஊா்வலமாக வந்து பட்டாசு வெடித்து கொண்டாடினா்.
பின்னா் அங்கு மாநில அமைப்புச் செயலா் சாருபாலா தொண்டைமான் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அவைத் தலைவா் சாத்தனூா் ராமலிங்கம், தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலா் தருண், பொதுக் குழு உறுப்பினா் ராமமூா்த்தி, பகுதிச் செயலா் தன்சிங் மற்றும் ஒத்தக்கடை செந்தில் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.