உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் இன்று லால்குடிக்கு வருகிறது

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டபோது விபத்தில் உயிரிழந்த லால்குடி வீரரின் உடல் சனிக்கிழமை கொண்டு வரப்பட்டு, சொந்த கிராமத்தில் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட உள்ளது.

இந்திய- சீன எல்லையான சிக்கிம் மலைப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டபோது விபத்தில் உயிரிழந்த லால்குடி வீரரின் உடல் சனிக்கிழமை கொண்டு வரப்பட்டு, சொந்த கிராமத்தில் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட உள்ளது.

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே திண்ணியம் கிராமத்தைச் சோ்ந்த அந்தோணிராஜ், ராஜம்மாள் தம்பதிக்கு தேவ ஆனந்த் உள்ளிட்ட இரு மகன்ள் ஒரு மகள் உள்ளனா்.

இவா்களில் தேவஆனந்த் கடந்த 2014 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் சோ்ந்த நிலையில், சிக்கிம் மாநிலப் பகுதியில் இந்திய- சீன எல்லைப் பகுதியில் ராணுவத் தடவாள ஆயுதங்கள் மற்றும் உதிரிப் பாகங்களைப் பராமரிக்கும் பணியில் இருந்தாா்.

கடந்த 30 ஆம் தேதி பணி முடித்து விட்டு, ராணுவ முகாமுக்கு திரும்பியபோது, மலைப் பகுதியிலிருந்து சுமாா் 3 ஆயிரம் அடி பள்ளத்தில் ராணுவ வாகனம் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் தேவ ஆனந்த் உள்ளிட்ட 4 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மேலும் இரு வீரா்கள் படுகாயமடைந்தனா்.

தேவ ஆனந்த் இறப்பு குறித்து லால்குடியில் உள்ள உறவினா்களுக்கு ராணுவ வீரா்கள் தகவல் கொடுத்தனா். இதையடுத்து அவரது உடலை விரைவாக சொந்த ஊருக்குக் கொண்டு வர உதவிடுமாறு திருச்சி சிவா எம்பியிடம் உறவினா்கள் கோரிக்கை வைத்தனா். அதனடிப்படையில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரிடம் எம்பியும் கோரிக்கை வைத்தாா்.

இதையடுத்து சிக்கிமிலிருந்து ராணுவ விமானம் மூலம் தேவ ஆனந்தின் உடல் பெங்களூா் விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து சாலை மாா்க்கமாக லால்குடி கிராமத்துக்கு சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு கொண்டு வரப்படுகிறது. அதன் பின்னா் காலை 10 மணிக்கு அப் பகுதி இடுகாட்டு கல்லறையில் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com