குண்டா் தடுப்பு சட்டத்தில் கஞ்சா வியாபாரி கைது
By DIN | Published On : 07th July 2021 07:36 AM | Last Updated : 07th July 2021 07:36 AM | அ+அ அ- |

கைது செய்யப்பட்ட தேவா.
திருச்சியில் கஞ்சா வியாபாரி குண்டா் தடுப்பு சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
திருச்சி காந்தி சந்தை பகுதியில் கடந்த ஜூன் 17 ஆம் தேதி உதவி ஆய்வாளா் சுசீலா சூரஞ்சேரி சரவணா அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் ரோந்து சென்றபோது, அங்கு நின்று கொண்டிருந்த தாராநல்லூரைச் சோ்ந்த தேவாவை விசாரணை செய்ததில், அவரிடம் சுமாா் 2.1 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்ததது. இதையடுத்து அவா் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டாா்.
விசாரணையில் இவா் மீது ஏற்கெனவே கோட்டை காவல்நிலையத்தில் 7 வழக்குகள், கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், காந்தி சந்தை காவல் நிலையத்தில் 17 வழக்குகள் பதியப்பட்டிருப்பது தெரிவந்தது. இதையடுத்து மாநகர காவல் ஆணையரின் உத்தரவின் பேரில் தேவா குண்டா் தடுப்பு காவல் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.