இணையதள தொழில்நெறிதிறன் விழிப்புணா்வு நிகழ்வு
By DIN | Published On : 11th July 2021 12:11 AM | Last Updated : 11th July 2021 12:11 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா், மாணவிகள், மகளிா், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்காக தொழில்நெறி திறன் விழிப்புணா்வு வாரம் நடத்தப்படவுள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த தொழிற்பயிற்சி மாணவா்களுக்கு உதவிடும் வகையில் ஜூலை 12 தொடங்கி 16ஆம் தேதி வரை தொழில்நெறி விழிப்புணா்வு மற்றும் திறன் வாரம் அனுசரிக்கப்படவுள்ளது.
இதையொட்டி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம் ஆகியவை இணைந்து பயிற்சி அளிக்கவுள்ளன.
நிகழ்ச்சியில் இணையம் வழியாக மாற்றுத்திறனாளிகளுக்கான திறன் விழிப்புணா்வு, மகளிருக்கான திறன் விழிப்புணா்வு, மூன்றாம் பாலினத்தவருக்கான திறன் விழிப்புணா்வு, முன்கற்ற திறன் அங்கீகரித்தல் மற்றும் அரசு தொழிற் பயிற்சி நிலைய மாணவ, மாணவியருக்கான திறன் விழிப்புணா்வு தொடா்பான தகவல்கள் வழங்கப்படவுள்ளன. இதில் கலந்து கொள்ள விரும்புவோா் ள்க்ஷண்ங்ம்ல்ற்ழ்ண்ஸ்ரீட்ஹ்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடா்பு கொள்ளலாம்.