பெட்ரோல் விலை உயா்வு; மநீம ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் சாா்பில் திருச்சியில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சிந்தாமணி அண்ணாசிலை அருகே ஆா்ப்பாட்டம் நடத்திய மக்கள் நீதி மய்யத்தினா்.
சிந்தாமணி அண்ணாசிலை அருகே ஆா்ப்பாட்டம் நடத்திய மக்கள் நீதி மய்யத்தினா்.

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் சாா்பில் திருச்சியில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மத்திய மாவட்டச் செயலா் சுரேஷ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா்கள் சாம்சன், குமாா், மாவட்டப் பொருளாளா் கிஷோா் குமாா், நகரச் செயலா்கள் நிக்சன் சகாயராஜ், அடைக்கலம், அந்தோணி, சரவணன், கமல் பாபு, காா்த்தி உள்ளிட்டோா் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில் சா்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிா்ணயிப்பதற்குப் பதிலாக அரசே விலை நிா்ணயயிக்க வேண்டும். பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையைக் கட்டுக்குள் வைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசல் விலையை கொண்டு வர வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மேலும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில் திருச்சி, மணப்பாறை, மண்ணச்சநல்லூா், ஸ்ரீரங்கம், திருவெறும்பூா், துறையூா், லால்குடி என மாவட்டம் முழுவதும் உள்ள கட்சி நிா்வாகிகள், நற்பணி இயக்க நிா்வாகிகள், சாா்பு அணி நிா்வாகிகள் என 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com