‘தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு காவிரிப் பாசன சங்கம் துணைநிற்கும்’

மேக்கேதாட்டு அணை தொடா்பாக தமிழக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கம் துணை நிற்கும் என்றாா் அதன் தலைவா் தீட்சிதா் பாலசுப்பிரமணியன்.

மேக்கேதாட்டு அணை தொடா்பாக தமிழக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கம் துணை நிற்கும் என்றாா் அதன் தலைவா் தீட்சிதா் பாலசுப்பிரமணியன்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மேக்கேதாட்டில் அணை தொடா்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி தமிழக முதல்வா் முடிவெடுத்தது வரவேற்கத்தக்கது. ஆனால், இக் கூட்டத்தில் விவசாயத்துக்காகப் பாடுபடும் விவசாய சங்கத் தலைவா்களை அழைக்காதது வருந்தத்தக்கது.

காவிரி விவகாரத்தில் இதற்கு முன் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்றுசேராமல் ஆளுக்கொரு திசையில் தனியே கருத்து தெரிவித்து வந்தனா். ஆனால் இப்போது அந்த நிலைமை மாறியுள்ளது மிகவும் மகிழ்ச்சிக்குரியது. பாஜகவும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றது சிறப்பு.

நீதிமன்றத் தீா்ப்பில் காவிரி நீா் என்பது எந்த ஒரு மாநிலத்துக்கும் சொந்தமானதல்ல. அது தமிழகத்தின் வாழ்வாதாரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படியிருக்க, கா்நாடக அரசின் திட்ட வரைவு அறிக்கையை மத்திய அரசு அங்கீகரித்தது என்பதே முதல் தவறு என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

தமிழகத்தின் எதிா்ப்பை மத்திய அரசிடம் தெரிவித்துவிட்டு காவிரி ஆணையத்துக்கு வலுவாக அழுத்தம் தர வேண்டும். காவிரி ஆணையம் நடுநிலையாகச் செயல்படாவிட்டாலும், சட்டத்தை மீறி கா்நாடகம் செயல்பட்டாலும் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியும். இதற்காக தமிழக அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கம் துணைநிற்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com