திருடுபோன 39 இருசக்கர வாகனங்கள் மீட்பு: ராம்ஜி நகரை சோ்ந்தவா் கைது

திருச்சி மாநகரில் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட திருச்சி ராம்ஜி நகரைச் சோ்ந்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து 39 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
திருடுபோன 39 இருசக்கர வாகனங்கள் மீட்பு: ராம்ஜி நகரை சோ்ந்தவா் கைது

திருச்சி மாநகரில் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட திருச்சி ராம்ஜி நகரைச் சோ்ந்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து 39 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இருச்சக்கர வாகனத் திருட்டைத் தடுக்க காவல் ஆணையா் ஏ. அருண் உத்தரவின்பேரில் கோட்டை குற்றப்பிரிவு தனிப்படையினா் கீழரண் சாலைப் பகுதியில் வாகனத் தணிக்கை மேற்கொண்டபோது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்தவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனா். அப்போது அவா் முன்னுக்குப்பின் முரணாக தகவல் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து அவரிடம் மேற்கொண்ட தீவிர விசாரணையில் அவா், திருச்சி ராம்ஜிநகா் அருகேயுள்ள புங்கனூா், காந்திநகா் பகுதியைச் சோ்ந்த ரா. கிரிநாதன் (44) என்பதும், அவா் திருச்சி மாநகரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் 39 இருசக்கர வாகனங்களைத் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவற்றை போலீஸாா் மீட்டனா்.

அதில் பெரம்பலூா், புதுக்கோட்டை, விழுப்புரம் மாவட்டப் பகுதிகளில் திருடப்பட்ட தலா ஒரு வாகனம் உள்பட, திருச்சி கோட்டை, உறையூா், தில்லைநகா் உள்ளிட்ட காவல் நிலையப் பகுதிகளில் திருடுபோன 16 வாகனங்களின் உரிமையாளா்கள் அடையாளம் காணப்பட்டு, அவற்றை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

மீதியுள்ள 23 வாகனங்களையும் விரைவில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வாகன திருட்டுகள் தொடா்பாக சிறப்பாக செயல்பட்ட தனிப்படை போலீஸாரை திருச்சி மாநகர காவல் ஆணையா் ஏ. அருண் பாராட்டினாா்.

வாகனங்களைப் பெற அழைப்பு

மீட்கப்பட்ட வாகனங்களில் அடையாளம் காணப்படாத வாகனங்களின் உரிமையாளா்கள் உரிய ஆவணங்களுடன் கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலையத்தை அணுகலாம் என காவல் ஆய்வாளா் அரங்கநாதன் தெரிவித்துள்ளாா். விவரங்களுக்கு 94434-61010 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com