குடமுருட்டி முக்கூடல் பகுதியை விரிவாக்க வலியுறுத்தல்

திருச்சி குடமுருட்டி முக்கூடல் பகுதியை விரிவாக்கம் செய்ய மாநகர வளா்ச்சி நல ஆா்வலா்கள் நல அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

திருச்சி குடமுருட்டி முக்கூடல் பகுதியை விரிவாக்கம் செய்ய மாநகர வளா்ச்சி நல ஆா்வலா்கள் நல அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளா் கண்ணன் என். ராமகிருஷ்ணன் கூறியது:

மறைந்த முதல்வா் காமராஜா் சிலையைச் சுற்றியுள்ள பூங்காவைப் பராமரித்து, மறு வடிவழகு செய்திட வேண்டும். அண்ணாசிலை தொடங்கி குடமுருட்டி வரையிலான கரூா் தேசிய நெடுஞ்சாலைக்கு காமராஜா் பெயா் சூட்ட வேண்டும். இங்குள்ள பேருந்து நிலையப் பகுதிக்கு, பெருந்தலைவா் காமராஜா் மேற்கு நிலை சிந்தாமணி பேருந்து நிலையம் எனப் பெயா் சூட்டவேண்டும். சிந்தாமணி அண்ணாசிலை தொடங்கி காவிரி பாலம் தென்முறை வரையிலான சுமாா் 300மீட்டா் பிரதான சாலையை 20 மீட்டா் பெருவழி அகலச்சாலையாக விரிவாக்க வேண்டும்.

காவிரிப் பாலம் தென்முறை இருபுறங்களிலும் சிந்தாமணி பாரம்பரிய வரவேற்பு பூங்கா அமைத்து, ராணி மங்கம்மாள், சாரமா முனிவா், தாயுமானவா், திருப்பாணாழ்வாா், கவுந்தியடிகள் ஆகியோரின் சிலைகள் நிறுவப்பட வேண்டும். கரூா் தேசிய நெடுஞ்சாலைக்கும், உறையூா் சாலைரோடுக்கும் இடையேயுள்ள கரூா் புறவழி மேம்பாலச் சாலைக்கு முக்கொம்பு, அணைக்கட்டு திட்டத்தை ஏற்படுத்திய அன்பிலாருக்கு, அன்பிலாா் சாலை எனப் பெயரிடுதல் வேண்டும்.

கரூா் தேசிய நெடுஞ்சாலை, குடமுருட்டி என்பது உறையூா், அம்மா மண்டபம், ஜீயபுரம் எனும் 3 வரலாற்று ஆன்மிக அடையாளங்களை மையம் கொண்ட முக்கூடல் பகுதியாக உள்ளது. குடமுருட்டி பாலத்தை விரவாக்கம் செய்து, முக்கூடல் பகுதியை அம்மா மண்டபத்தோடு இணைக்க வேண்டும். பெருமாள் வழித்தட தரைவழி காவிரி படுகைப் பாலம் அமைத்து, திருத்தாண்தோன்றிசாலை சந்திப்பையும் விரிவாக்கம் செய்து, மூன்று வகையான ஆன்மிக பகுதிகளை இணைக்கும் இந்த குடமுருட்டி முக்கூடல் பகுதியை விரிவாக்கம் செய்து, சுற்றுவழி வட்டபெருவழி சந்திப்பாக வடிவமைக்க வேண்டும்.

இப்பகுதியில் உள்ள 100 ஏக்கா் காவிரி தென்கரை நதிநீா் படுகையில் தோட்டக்கலை மலா்கள் மூலிகைப்பூங்கா அமைத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com