முஸ்லிம் உரிமைப் பாதுகாப்பு கழகம் நூதன போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முஸ்லிம் உரிமைப் பாதுகாப்பு கழகத்தினா், திருச்சியில் வெள்ளிக்கிழமை மாலை நூதன முறையில் (முட்டியிட்டு) போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பாலக்கரை ரவுண்டானா அருகே நடைபெற்ற அமைப்பின் மாநிலப் பொதுச் செயலா் இடிமுரசு இஸ்மாயில் தலைமை வகித்து பேசினாா். திருச்சி மாநகர மாவட்டச் செயலா் ரபீக் ராஜா முன்னிலை வகித்தாா். மாநிலப் பொருளாளா் ஹனீப், மாநில இளைஞரணி தலைவா் சாதிக் கான், மாநில அமைப்புச் செயலா் சையது இப்ராகிம், மாவட்ட தலைவா் அரப்ஜான் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

ஆா்ப்பாட்டத்தில் பள்ளிவாசல்களில் பணிபுரிவோருக்கும் ரூ.4 ஆயிரம் உதவித் தொகை, கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை குறைத்து ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்.

தமிழக சிறைகளில் 25 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள சிறைவாசிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com