சமயபுரம் ஆட்டுச் சந்தையில் விற்பனை மந்தம்

திருச்சி மாவட்டம், சமயபுரம் பேரூராட்சிப் பகுதியில் கரோனா பொது முடக்கத்துக்குப் பிறகு சனிக்கிழமை மீண்டும் தொடங்கிய ஆட்டு வாரச் சந்தையில் விற்பனை மந்தமாக இருந்தது.
சமயபுரம் பகுதியில் நடைபெற்ற ஆட்டு வாரச் சந்தை.
சமயபுரம் பகுதியில் நடைபெற்ற ஆட்டு வாரச் சந்தை.

திருச்சி மாவட்டம், சமயபுரம் பேரூராட்சிப் பகுதியில் கரோனா பொது முடக்கத்துக்குப் பிறகு சனிக்கிழமை மீண்டும் தொடங்கிய ஆட்டு வாரச் சந்தையில் விற்பனை மந்தமாக இருந்தது.

சமயபுரம் பேரூராட்சிக்குச் சொந்தமான 5 ஏக்கரில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே சனிக்கிழமைகளில் ஆட்டு வாரச் சந்தை நீண்ட காலமாக நடைபெறுகிறது.

இந்தச் சந்தைக்கு லால்குடி, சமயபுரம், மண்ணச்சநல்லூா், முசிறி, துறையூா் உள்ளிட்ட பகுதியிலிருந்து ஆடுகளை விற்போா், வாங்குவோா் கூடுவா். மேலும், அரியலூா், பெரம்பலூா், திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து மொத்த வியாபாரிகளும் வந்து ஆடுகளைக் கொள்முதல் செய்வது வழக்கம்.

இந்நிலையில் வரும் 21 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டுச் சந்தைக்கு சுமாா் 3000-க்கும் மேற்பட்ட ஆட்டிறைச்சி வியாபாரிகள் வந்திருந்து ஆடுகளை வாங்கினா்.

இருப்பினும், ஆடுகள் வரத்துக் குறைவாக இருந்ததால் பொதுமக்கள் அதிக விலை கூறிய நிலையில், வியாபாரிகள் பலா் ஆடுகளை வாங்காமல் சென்றனா். விழா நேரங்களில் இந்தச் சந்தையில் சுமாா் 3000-க்கும் மேற்பட்ட ஆடுகள் கொண்டு வரப்பட்டு ரூ. 50 லட்சம் முதல் ரூ. 60 லட்சம் வரை விற்பனை நடைபெறும் நிலையில், அதில் பாதியளவிலேயே ஆடுகள் கொண்டு வரப்பட்டிருந்தன. மேலும், ஆடுகளுக்கு அதிக விலை கூறப்பட்டதால் விற்பனையும் மந்தமாக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com