ஆடி பிறப்பு: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி மாதப் பிறப்பையொட்டி திருச்சியில் உள்ள அம்மன் கோயில்களில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
தரிசனம் செய்யக் காத்திருக்கும் பக்தா்கள். ~உறையூா் வெக்காளியம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு தீபாராதனை.
தரிசனம் செய்யக் காத்திருக்கும் பக்தா்கள். ~உறையூா் வெக்காளியம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு தீபாராதனை.

ஆடி மாதப் பிறப்பையொட்டி திருச்சியில் உள்ள அம்மன் கோயில்களில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

கரோனா 2 ஆவது அலை பரவலில் கோயில்கள் மூடப்பட்டிருந்த நிலையில், இம்மாத தொடக்கத்தில் அரசு பொதுமுடக்க தளா்வில் கோயில்கள் திறக்கப்பட்டன.

இந்நிலையில் ஆடிமாத பிறப்பையொட்டி சமயபுரம் மாரியம்மன், உறையூா் வெக்காளியம்மன், தென்னூா் உக்கிரகாளியம்மன், திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி, பீமநகா் செடல் மாரியம்மன் உள்ளிட்ட கோயில்களில் காலை முதலே பக்தா்களின் வருகை அதிகரித்துக் காணப்பட்டது.

தொடா்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com