குழந்தைகளுக்கான தடுப்பூசி குறித்த ஆலோசனை கூட்டம்

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் குழந்தைகளுக்கான நியுமோகோக்கல் கான்ஜுகேட் தடுப்பூசி வழங்குவது குறித்து ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

 திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் குழந்தைகளுக்கான நியுமோகோக்கல் கான்ஜுகேட் தடுப்பூசி வழங்குவது குறித்து ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியா் சு.சிவராசு தலைமை வகித்தாா்.

கூட்டத்தில், குழந்தைகளைப் பெரும்பாலும் பாதிக்கும் நியுமோகோக்கல் நிமோனியா பாக்டீரியாவால் ஏற்படும் ஒருவித தொற்று நோய் குறித்தும், இதனால் குழந்தைகளுக்கு சுவாசிப்பதில் சிரமம், காய்ச்சல், இருமல், மற்றும் மூச்சுத் திணறல் ஏற்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் சுவாசத் துளிகள் மூலம் பரவும் இத்தொற்று கடுமையாக இருந்தால் குழந்தைகளின் மரணத்திற்கு கூட வழிவகுக்கும் என்பதால் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நியுமோகோக்கல் காஞ்சூட் தடுப்பூசி வழங்க முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி பி.சி.வி. 6 வாரங்கள், 14 வாரங்கள் மற்றும் மீண்டும் 9ஆம் மாதத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. நியுமோகோக்கல் நோயிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க இந்த பி.சி.வி. தடுப்பூசியின் மூன்று தவணைகளையும் அரசு இலவசமாக வழங்கும் தடுப்பூசி பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளது.

இந்தத் தடுப்பூசி குழந்தையின் வலது தொடையில் நடுப்பகுதி உள் தசையில் போடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா். நிகழ்வில் சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் லட்சுமி, துணை இயக்குநா் ராம்கணேஷ், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வா் வனிதா, நகா்நல அலுவலா் யாழினி மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com