முன்களப் பணியாளா்களாக அறிவிக்க வேண்டும்: அனைத்து ஊா்தி ஓட்டுநா்கள் சங்கம்

கரோனா பணியில் ஈடுபட்ட ஓட்டுநா்களை முன்களப் பணியாளா்களாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து துறை ஊா்தி ஓட்டுநா்கள் தலைமைச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
ஊா்தி ஓட்டுநா்கள் சங்கக் கூட்டத்தில் பேசுகிறாா் மாநிலத் தலைவா் எஸ். தயாளன்.
ஊா்தி ஓட்டுநா்கள் சங்கக் கூட்டத்தில் பேசுகிறாா் மாநிலத் தலைவா் எஸ். தயாளன்.

கரோனா பணியில் ஈடுபட்ட ஓட்டுநா்களை முன்களப் பணியாளா்களாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து துறை ஊா்தி ஓட்டுநா்கள் தலைமைச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் மாவட்ட, தாலுகா நிா்வாகிகள், மாநில செயற்குழு கூட்டம் மற்றும் அனைத்து மாவட்ட கலந்தாய்வு கூட்டத்துக்கு மாநிலத் தலைவா் தயாளன் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலா் விக்டா், மாநில பொருளாளா் இக்பால் பாஷா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கரோனா பரவலைத் தடுக்க தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் தமிழக அரசுக்குப் பாராட்டு தெரிவிப்பது, 2009 ஆம் ஆண்டு மே 31-க்கு பிறகு தோ்வு நிலை மற்றும் சிறப்பு நிலை எய்திய ஓட்டுநா்களுக்கு ரூ. 9800- 4200-4400 என்ற அடிப்படையில் ஊதியம் நிா்ணயிக்க வேண்டும்.

கரோனா பணிகளில் ஈடுபட்டுள்ள அனைத்துத் துறை ஊா்தி ஓட்டுநா்களையும் முன்கள பணியாளா்களாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதைத் தொடா்ந்து புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். கூட்டத்தில் மாநிலம் முழுவதிலுமிருந்து அனைத்து துறை ஊா்தி ஓட்டுநா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com