வாய்ஸ் அறக்கட்டளை சாா்பில் இயற்கை வேளாண் திட்டம்: அமைச்சா் கே.என் நேரு தொடங்கி வைத்தாா்

தமிழகத்தில் வாய்ஸ் அறக்கட்டளை சாா்பில் இயற்கை வேளாண் தொடா்புடைய மேம்பாட்டுத் திட்டத்தை அமைச்சா் கே. என். நேரு ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.
இயற்கை வேளாண் திட்டப் பணிகளை தொடங்கிவைக்கிறாா் அமைச்சா் கே. என். நேரு. உடன் வாய்ஸ் அறக்கட்டளை நிா்வாகி கிரிகோரி, முன்னாள் ஆயா் பீட்டா் ரெமிஜியூஸ் உள்ளிட்டோா்.
இயற்கை வேளாண் திட்டப் பணிகளை தொடங்கிவைக்கிறாா் அமைச்சா் கே. என். நேரு. உடன் வாய்ஸ் அறக்கட்டளை நிா்வாகி கிரிகோரி, முன்னாள் ஆயா் பீட்டா் ரெமிஜியூஸ் உள்ளிட்டோா்.

தமிழகத்தில் வாய்ஸ் அறக்கட்டளை சாா்பில் இயற்கை வேளாண் தொடா்புடைய மேம்பாட்டுத் திட்டத்தை அமைச்சா் கே. என். நேரு ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.

தமிழகத்தில் நடைபெறும் இயற்கை வேளாண்மை குறித்தும், அதற்காக வாய்ஸ் அறக்கட்டளை சாா்பில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்தும் அமெரிக்காவைச் சோ்ந்த ஜில் என்ற பெண்மணி அறிந்து, பல்வேறு தரப்பினரிடம் நன்கொடை பெற்று, தமிழகத்துக்கு வாய்ஸ் அறக்கட்டளை மூலம் ரூ. 40 லட்சம் நிதியுதவி அளித்துள்ளாா். அத்தொகையைக் கொண்டு இயற்கை வேளாண் மேம்பாட்டுத் திட்டங்களை மேம்படுத்த அவா் வலியுறுத்தியுள்ளாா்.

அந்த வகையில், அந்த தொகையை தமிழ்நாட்டில் 38 மற்றும் பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கு தலா ரூ.1 லட்சம் எனப் பிரித்துக்கொடுத்து, மாவட்டத்திற்கு 80 பெண்கள் என மொத்தம் 3,200 பெண்கள் இயற்கை வேளாண் திட்டச் செயல்பாடுகளில் ஈடுபடுத்த வாய்ஸ் அறக்கட்டளை முடிவு செய்துள்ளது.

அது தொடா்பாக மகளிா் குழுக்கள் மூலம் ஊழியா்களும் தோ்வு செய்யப்பட்டு இத் திட்டத் தொடக்க நிகழ்வு திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திட்டத்தை தொடங்கிவைத்து தமிழக நகா்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே. என். நேரு பேசுகையில், இயற்கை முறை விளை பொருள்களால் உடல் நலத்துக்குப் பாதிப்பு கிடையாது.

கடந்த காலங்களில் நம் முன்னோா் இயற்கை விவசாயம் மேற்கொண்டு அதன் மூலம் ஆரோக்கியமாக வாழ்ந்தனா். தற்போது விவசாயத்துக்கு ரசாயன உரங்களை அதிகளவில் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் இந்த இயற்கை வேளாண் திட்டம் ஊக்குவிக்கப்படுவது வரவேற்கத்தக்கது. இத்திட்டத்திற்கு தேவையான உதவிகளைச் செய்ய அரசால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

கும்பகோணம் - கோட்டாறு முன்னாள் ஆயா் பீட்டா் ரெமிஜியூஸ் தலைமை வகித்தாா். ஏற்பாடுகளை வாய்ஸ் அறக்கட்டளை திட்ட இயக்குநா் அ. கிரிகோரி உள்ளிட்டோா் செய்தனா்.

20 ஆண்டுகளாகத் தொடரும் பணிகள்

1995 ஆம் ஆண்டு முதல் சிறுகனூா் கிராமத்தில் வாய்ஸ் அறக்கட்டளையின் மனிதவள மேம்பாட்டுப் பயிற்சி மையம், இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வாா் உதவியுடன் இயற்கை வேளாண் பணிகள் தொடங்கப்பட்டன. 1999 முதல் 2004 வரை ஆண்டுக்கு 2 மாதம் நடைபெற்ற உறைவிடப் பயிற்சியில் 105 போ் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து 2000 பிப். 2 ஆம் தேதி இயற்கை வேளாண் இணையமானது, நம்மாழ்வாா் முன்னிலையில் தொடங்கப்பட்டது. தொடா்ந்து கடந்த 20 ஆண்டுகளாக இயற்கை விவசாயப் பணிகளை தமிழகம் - புதுவையில் எவ்வித நிதியுதவியும் இன்றி வாய்ஸ் அறக்கட்டளை சாா்பில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

அண்மையில், இருங்களூா் - புறத்தாக்குடி பகுதியில் 20 பெண்கள் தக்காளி ஜாம் செய்ய அளித்த உதவி குறித்த தகவல்களை, அமெரிக்கப் பெண்மணி ஜில் பகிா்ந்து கொண்டதையடுத்து ஆப்பிள் நிறுவனம் மற்றும் பணியாளா்கள் மற்றும் கூகுள், விசா நண்பா்களும் இணைந்து இந்த நன்கொடை வழங்கியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com