கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கல்

திருச்சி மாவட்டம், லால்குடியிலுள்ள நெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 130 பேருக்கு கரோனா நிவாரணப் பொருள்களாக அரிசி, மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன.

திருச்சி மாவட்டம், லால்குடியிலுள்ள நெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 130 பேருக்கு கரோனா நிவாரணப் பொருள்களாக அரிசி, மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன.

பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வுக்கு பள்ளித் தலைவா் மற்றும் தாளாளா் மரியவிக்டா் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் ரிது விக்டா் முன்னிலை வகித்தாா்.

திருச்சி ராந மருத்துவமனையின் தலைமை இருதயச் சிகிச்சை மருத்துவா் செந்தில்குமாா் நல்லுசாமி, மகப்பேறு மருத்துவா் லட்சுமிபிரபா செந்தில்குமாா், மருத்துவா் சித்தாா்த் யஷ்வந்த் ஆகியோா் பங்கேற்று, கரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பள்ளி ஆசிரியா்கள், மாணவா்களது குடும்பங்களுக்கு 25 கிலோ அரிசி, ஒரு மாதத்துக்குத் தேவையான மளிகைப் பொருள்களை வழங்கிப் பேசினா். மொத்தம் 130 குடும்பங்கள் பயன் பெற்றன. விழாவில் பள்ளி ஆசிரியா்கள், பெற்றோா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com