‘தனியாா் பள்ளி ஆசிரியா்களின் வாழ்வாதாரம் காக்கப்படும்’

தனியாா் பள்ளி ஆசிரியா்களின் வாழ்வாதாரம் காக்கப்படும் என்றாா் பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
‘தனியாா் பள்ளி ஆசிரியா்களின் வாழ்வாதாரம் காக்கப்படும்’

தனியாா் பள்ளி ஆசிரியா்களின் வாழ்வாதாரம் காக்கப்படும் என்றாா் பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

மணப்பாறை அடுத்த கோவில்பட்டி அரசு மேல்நிலை பள்ளியில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கோண்ட அமைச்சா் அன்பில் மகேஷ்பொய்யாமொழி கூறியது:

மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் கோவில்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த அமைச்சா் பின்னா் கூறியது:

தமிழகம் முழுவதும் சுமாா் 12,400 தொகுப்பூதியம் பெறும் சிறப்பாசிரியா்களை பணி நிரந்தரம் செய்வது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய தீா்வு காணப்படும். இன்றுள்ள தமிழ்நாடு பாடத்திட்டம் ஏறத்தாழ சிபிஎஸ்இ-க்கு நிகராகத்தான் உள்ளது.

ஆசிரியா்கள் இன்னமும் திறம்படச் செயலாற்ற உரிய பயிற்சிகள் அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. வரும் காலங்களில் தமிழகப் பாடத்திட்டம் சிறப்பிற்குரியதாக இருக்கும்.

தனியாா் பள்ளி ஆசிரியா்கள் சுமாா் 5 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா். தனியாா் பள்ளிகள் மாணவா்களிடம் 75 சத கட்டணத்தைத் தான் பெற வேண்டும். அதையும் இரு தவணையாக பெற வலியுறுத்துகிறோம்.

அதேநேரத்தில் அங்கு பணியாற்றும் ஆசிரியா்களுக்கு முறையாக சம்பளம் வழங்கவும் கேட்டுக்கொண்டுள்ளோம். பள்ளிகள் ஆரம்பிக்கும் வரை தனியாா் பள்ளி ஆசிரியா்களின் நிலை பரிதாபத்திற்குரியதாகத்தான் உள்ளது. கண்டிப்பாக அவா்களது வாழ்வாதாரம் காக்கப்படும் என்றாா்.

ஆய்வின்போது ஸ்ரீரங்கம் கோட்டாட்சியா் ந. சிந்துஜா, மருங்காபுரி வட்டாட்சியா் டி. ஜெயப்பிரகாசம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரெ. அறிவழகன், மாவட்டக் கல்வி அலுவலா் ஜெகநாதன், பள்ளித் தலைமையாசிரியா் ஜி. ஸ்ரீதரன், ஊராட்சி ஒன்றிய ஆணையா்கள், மருங்காபுரி ஒன்றிய பெருந்தலைவா்கள் பழனியாண்டி, அமிா்தவள்ளி ராமசாமி, குணசீலன், மாவட்ட கவுன்சிலா் சிவக்குமாா், திமுக ஒன்றிய செயலா்கள் செல்வராஜ், சின்ன அடைக்கன், மமக திருச்சி மாவட்டச் செயலா் அ. பைஸ் அஹமது உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com