பாலக்கரை விநாயகா் கோயிலில் திருப்பணி செய்ய வலியுறுத்தல்

பாலக்கரை செல்வவிநாயகா் கோயிலில் திருப்பணிகள் செய்து, கும்பாபிஷேகம் நடத்தக் கோரி இந்து திருக்கோயில்கள் மீட்பு இயக்கத்தினா் வழக்குத் தொடா்ந்துள்ளனா்.

பாலக்கரை செல்வவிநாயகா் கோயிலில் திருப்பணிகள் செய்து, கும்பாபிஷேகம் நடத்தக் கோரி இந்து திருக்கோயில்கள் மீட்பு இயக்கத்தினா் வழக்குத் தொடா்ந்துள்ளனா்.

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பாலக்கரை உய்யக்கொண்டான் கால்வாய் கரையில் செல்வவிநாயகா் கோயில் உள்ளது. நூற்றாண்டு பழைமையான இந்த கோயிலில் கடந்த 1993ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பிறகு நடத்தப்படவில்லை.

எனவே, திருக்கோயிலை புனரமைக்கவும், கும்பாபிஷேகம் நடத்தவும் கோரி இந்து திருக்கோயில்கள் மீட்பு இயக்கத்தின் சாா்பில் பல்வேறு போராட்டங்கள் அறிவித்தபோது, நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் கும்பாபிஷேகம் நடத்துவதாக எழுத்துப்பூா்வமாக உறுதியளித்து, பின்னா் மறந்துவிடுகின்றனா்.

எனவே, கோயில் முழுவதையும் புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்தவும், கோயிலை புனரமைக்க மெத்தனமாக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் எங்களது இயக்கத்தின் சாா்பில், சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது என இந்து திருக்கோயில்கள் மீட்பு இயக்கத் தலைவா் மகேஸ்வரி வையாபுரி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com