மழையால் வீடுகள் சேதம்; அமைச்சா் நிதியுதவி

மழையால் சேதமடைந்த வீடுகளில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது சொந்த நிதியிலிருந்து உதவி வழங்கி ஆறுதல் கூறினாா்.
மழையால் வீடுகள் சேதம்; அமைச்சா் நிதியுதவி

மழையால் சேதமடைந்த வீடுகளில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது சொந்த நிதியிலிருந்து உதவி வழங்கி ஆறுதல் கூறினாா்.

திருவெறும்பூா் பேரவைத் தொகுதிக்குள்பட்ட நவல்பட்டு ஊராட்சியில் மழையால், தீ விபத்தால் சேதமான வீடுகளைப் பாா்வையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினாா்.

மேலும், பாதிக்கப்பட்ட முருகானந்தம், செல்வி, ராஜேந்திரன், அங்குபொண்ணு ஆகியோருக்கு தனது சொந்த நிதியிலிருந்து தலா ரூ.10 ஆயிரம் வழங்கினாா். மேலும், அரசின் நிதியுதவிகளை அவா்களுக்குப் பெற்றுத் தரவும் வருவாய்த் துறையினருக்கு அறிவுறுத்தினாா்.

இதன் தொடா்ச்சியாக தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட குடிநீா் இணைப்பையும் மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து வைத்தாா். திருவெறும்பூரை அடுத்த குவளக்குடி ஊராட்சியில், வீதிவிடங்கம் பகுதிக்கு காவிரிக் குடிநீா் இணைப்பு அமைத்துள்ளதால் அப் பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். குடிநீா் இணைப்பைத் திறந்து தண்ணீா் வழங்கிய அமைச்சருக்கு தொகுதி மக்கள் நன்றியும், பாராட்டும் தெரிவித்தனா். தொடா்ந்து மரக் கன்றுகளையும் அமைச்சா் நட்டு வைத்தாா்.

நிகழ்வில், கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினா் கே.என். சேகரன், ஒன்றியச் செயலா் கே.எஸ்.எம். கருணாநிதி, பகுதிச் செயலா் நீலமேகம், ஒன்றிய பெருந்தலைவா் சத்யா கோவிந்தராஜ், குவளக்குடி ஊராட்சித் தலைவா் அழகு செந்தில், ஒன்றிய கவுன்சிலா் மகாதேவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com