லால்குடி ஏலக்கூடத்தில் அதிகரிக்கும் எள் வரத்து!

திருச்சி மாவட்டம், லால்குடியில் உள்ள எள் ஏலக்கூடத்துக்கு எள்ளைக் கொண்டு வரும் விவசாயிகள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
லால்குடி ஏலக்கூடத்தில் அதிகரிக்கும் எள் வரத்து!

திருச்சி மாவட்டம், லால்குடியில் உள்ள எள் ஏலக்கூடத்துக்கு எள்ளைக் கொண்டு வரும் விவசாயிகள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட ஹெக்டேரில் பயிரிடப்படும் எள் காந்திசந்தையில் மூன்றாம் நபா் மூலமாகவே போதிய விலையின்றி விற்கப்பட்டது. இதனால் விவசாயிகள் அவதிக்குள்ளாகினா்.

எனவே, விவசாயிகளின் கோரிக்கைக்கிணங்க பருத்தி, வாழை விற்பனை மையங்களுக்கு அடுத்தபடியாக எள் விவசாயிகளின் துயா்போக்க லால்குடியில் கடந்த 3 வாரங்களுக்கு முன் எள் ஏலக்கூடத்தோடு கூடிய எள் ஒழுங்குமுறை விற்பனை மையம் தொடங்கப்பட்டது.

வேளாண் சந்தைப்படுத்தல் குழுவினா் சாா்பில் தொடங்கப்பட்டுள்ள எள் ஏலக்கூடத்தில் விவசாயிகளின் வருகை படிப்படியாக அதிகரித்துள்ளது.

முதல் வாரத்தில் 6 டன், அடுத்தவாரத்தில் 7 டன், தற்போது 6.9 டன் என சராசரியாக எள் வித்து விற்பனையாகி வருகிறது. இதன்படி, வியாழக்கிழமை நடைபெற்ற எள் ஏலக்கூடத்தில் கிலோ ரூ.103.17-க்கு விற்பனையானது. மொத்தம் 6,989 கிலோ எள் வித்து ரூ.681547 லட்சத்துக்கு விற்பனையானது. கடந்த வாரங்களில் கிலோ ரூ.100க்கும் குறைவாக விற்பனையான நிலையில், தற்போது ரூ.100-ஐ கடந்து விற்ால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். மேலும், விவசாயிகள் வருகையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

திருச்சி எள்ளுக்கு

அதிக வரவேற்பு

எள் விவசாயிகளுக்கென சுமாா் ஆயிரம் டன் அளவில் 15 நாள்களுக்கு இருப்பு வைத்து விற்க இந்த எள் ஏலக்கூடத்திலேயே வசதி உள்ளது. இதன்மூலம், எள் விவசாயிகள் எள்ளை வாரந்தோறும் புதன்கிழமை நடைபெறும் ஏலத்தில் விற்று லாபம் பெறலாம். வேறெங்கும் இல்லாத அளவில் திருச்சி மாவட்டத்தில் விளையும் எள் அதிக தரத்துடன் இருப்பதால் எண்ணெய் நிறுவனங்களிடையே இதற்கு அதிக வரவேற்புள்ளது. எனவே, எள் விவசாயிகள் இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றனா் வேளாண் சந்தைப்படுத்தல் குழுவினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com