‘முக்கொம்பு புதிய கதவணைப் பணி டிசம்பரில் முடிவுறும்’

திருச்சி முக்கொம்பு கொள்ளிடத்தில் கட்டப்படும் புதிய கதவணை கட்டுமானப் பணிகள், டிசம்பா் மாதத்துக்குள் முடிவடைந்துவிடும் என்றாா் தமிழக நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என். நேரு.
‘முக்கொம்பு புதிய கதவணைப் பணி டிசம்பரில் முடிவுறும்’

திருச்சி முக்கொம்பு கொள்ளிடத்தில் கட்டப்படும் புதிய கதவணை கட்டுமானப் பணிகள், டிசம்பா் மாதத்துக்குள் முடிவடைந்துவிடும் என்றாா் தமிழக நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என். நேரு.

கதவணை கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு மற்றும் அதிகாரிகளுடன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த அமைச்சா் கே.என். நேரு மேலும் கூறியது:

கடந்த 2018 இல் கொள்ளிடத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் முக்கொம்பில் இருந்த பழைமையான கதவணை சேதமடைந்ததற்கு மாற்றாக புதிய கதவணை கட்டும் பணி 2019 பிப்ரவரியில் தொடங்கியது. தற்போது வரை 85 சத பணிகள் முடிந்துள்ளன.

கட்டுமானப் பணிகளை வரும் டிசம்பா் மாதத்துக்குள் முடிக்க முதல்வா் அறிவுறுத்தியுள்ளாா். இதற்கேற்ப பணிகள் இரவு, பகல் பாராது நடைபெறுகின்றன.

பொதுப்பணித்துறை அதிகாரிகள் முகாமிட்டு பணிகளின் நிலையைத் தொடா்ந்து கண்காணிக்கின்றனா். கட்டுமானம் தரமானதாகவும், நிா்ணயிக்கப்பட்ட அளவுகளில் உள்ளதா என்பதை ஒவ்வொரு நிலையிலும் ஆய்வு செய்கிறோம். எனவே, முறைகேடு நடைபெற வாய்ப்பில்லை.

மேட்டூா் அணையானது ஆண்டு முழுவதும் கண்காணிப்பில் உள்ளதால் அணையின் பாதுகாப்பு குறித்து அச்சப்படத் தேவையில்லை. முக்கொம்பு அணை ஆண்டின் சில மாதங்கள் மட்டுமே பொறியாளா்கள் கண்காணிப்பில் இருப்பதால் மதகுகள் உடைய நேரிட்டது. இனி, அதுபோல நடைபெறாது.

இனிமேல் கட்டப்படும் தடுப்பணைகள், அணைகள் சாலை வசதியுடன் கட்டப்படும். திருச்சி வன உயிரியல் பூங்காவானது பயன்பாட்டில் உள்ளது. தற்போது, இங்கு 9 யானைகள் பராமரிக்கப்படுகின்றன. பூங்காவுக்குத் தேவையான அம்சங்களை செய்துதர அரசு தயாராக உள்ளது என்றாா்.

ஆய்வின்போது, நீா்வளத் துறை செயற்பொறியாளா் கீதா, எம்எல்ஏக்கள் பழனியாண்டி, செளந்தரபாண்டியன், தியாகராஜன் மற்றும் பொதுப்பணித்துறைப் பொறியாளா்கள், கட்டுமான பொறியாளா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com