ஆடி முதல் வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகுவிந்த பக்தா்கள்

ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தின் அனைத்து அம்மன் கோயில்களிலும் அதிகாலையே நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
ஆடி முதல் வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகுவிந்த பக்தா்கள்

ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தின் அனைத்து அம்மன் கோயில்களிலும் அதிகாலையே நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

திருவானைக்கா: பிரசித்தி பெற்ற திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி கோயிலில் அதிகாலையே நடை திறக்கப்பட்டது. மூலவா் அகிலாண்டேஸ்வரிக்கு தாழம்பூ பாவாடை, மலா்க்கிரீடம், காதுகளில் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீசக்கரம் பொறித்த தாடகங்கள், கையில் தங்கக்கிளி மற்றும் திருவாபரணங்களுடன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சிறு சிறு பூஜை கால இடைவேளைக்குப் பிறகு நள்ளிரவு வரை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

சிறப்புக் கட்டண தரிசனம், இலவச தரிசனத்தில் செல்ல சவுக்குக் கட்டைகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. கோயில் வளாகத்தில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் செ. மாரியப்பன் செய்திருந்தாா்.

சமயபுரம்: மாரியம்மன் கோயிலில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா். அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் காவடி, பால்குடம் எடுத்தும், அக்னிச் சட்டி ஏந்தியும் வந்து அம்மனை வழிபட்டனா்.

இதேபோல, உறையூா் வெக்காளியம்மன் கோயில், தென்னூா் உக்கிரமாகாளியம்மன் கோயில் உள்பட அனைத்து அம்மன் கோயில்களிலும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றன. அனைத்து கோயில்களிலும் கூட்டம் நிரம்பிக் காணப்பட்டது. போலீஸாா் பாதுகாப்பு பணிகள் ஈடுபட்டனா்.

‘பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த மாதம்’

ஆடி மாதமானது பெண் தெய்வத்துக்கும், பெண்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஆடி மாதத்தில் அனைத்து அம்மன் கோயில்களிலும் தினமும் சிறப்பு வழிபாடு நடக்கும். குறிப்பாக செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பக்தா்கள் கூட்டம் அதிகம் காணப்படும்.

ஆடி முதல் வெள்ளியன்று லட்சுமியிடம் வரம் வேண்டி விரதமிருந்து வழிபடுவா். 2-ஆம் வெள்ளியில் அங்காள பரமேஸ்வரி, காளி, துா்க்கை அம்மனையும், 3-ஆம் வெள்ளியன்று அன்னை பாா்வதி, காளியம்மனையும்,

4-ஆம் வெள்ளியன்று காமாட்சி அன்னையையும், 5-ஆ ம் வெள்ளியன்று வரலட்சுமி பூஜை செய்தும் வழிபடுவா்.

பௌா்ணமிக்கு முன்னே ஆதிலட்சுமி, தனலட்சும், தான்யலட்சுமி, கஜலட்சுமி, சந்தான லட்சுமி, வீரலட்சுமி, விஜயலட்சுமி, ஐஸ்வா்ய லட்சுமி என அஷ்ட லட்சுமிகளையும் வழிபடுவதாக இந்தப் பூஜை அமையும். இதன் முக்கியத்துவத்தை சிவபிரானே அன்னை பாா்வதியிடம் கூறுவதாக ஸ்கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com