முதல்கட்டமாக 2 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு: அமைச்சா் கே.என். நேரு தகவல்

திமுகவின் திசைகாட்டும் திருச்சி என்ற வேலைவாய்ப்பு முகாம் மூலம் முதற்கட்டமாக 2 ஆயிரம் பேருக்கு வேலை வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா் கே.என்.நேரு.

திமுகவின் திசைகாட்டும் திருச்சி என்ற வேலைவாய்ப்பு முகாம் மூலம் முதற்கட்டமாக 2 ஆயிரம் பேருக்கு வேலை வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா் கே.என்.நேரு.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படியும், இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு தொடா்பான திமுக தோ்தல் அறிக்கையின் அடிப்படையிலும் திருச்சி இளையோருக்காக இணையவழி வேலைவாய்ப்பு முகாம் ‘திசை காட்டும் திருச்சி’ என்ற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முகாமில் கலந்து கொள்ள 15,231 இளைஞா்கள் பதிவு செய்துள்ளனா். கணினி தொழில்நுட்பம் தொடா்பான வேலைகளுக்கு 4159 பேரும், உற்பத்தி தொடா்பான வேலைகளுக்கு 2826 பேரும், வங்கி மற்றும் விற்பனை, சந்தைப்படுத்தல் துறைகளுக்கு 1956 பேரும், மருத்துவத்துறை சாா்ந்த பணிகளுக்கு 525 பேரும் விண்ணப்பித்துள்ளனா்.

விண்ணப்பித்துள்ளோரில் பெரும்பாலானோா் திருச்சியைச் சோ்ந்தவா்கள். ஆயினும் காவிரிப்படுகை அண்டை மாவட்டங்களிலிருந்தும் இளைஞா்கள் பதிவு செய்துள்ளனா்.

விண்ணப்பித்தோருக்கு நோ்காணலை எதிா் கொள்ளும் முறை பற்றி பயிற்றுவிக்கவும், நுணுக்கமான துறைசாா் அறிவுத் தகவல்களைப் பகிரவும் ஒரு வார கால பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. துறைசாா் நிபுணா்களைக் கொண்டு ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இப்பயிற்சி முகாம்கள் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி ‘சூம் செயலி’ மற்றும் யூ டியூப் மூலம் நடைபெறுகிறது. பல்லாயிரக்கணக்கான இளையோா் இதில் பங்கேற்று பயனடைகின்றனா்.

150-க்கும் அதிகமான தொழில் வணிக நிறுவனங்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கின்றன. இவா்களால் சுமாா் 5000 போ் வரைக்கும் வேலை தர முடியும். ஆனால் 2 பெரிய சவால்களைக் கடக்க வேண்டியுள்ளது. ஆங்கில மொழியில் இயல்பாக உரையாடும் ஆற்றலின்மை முதல் சவால். திருச்சியை விட்டு வெளி நகரங்களுக்குச் சென்று வேலை செய்ய இளையோா் தயங்குவது 2-ஆம் சவால். ஆங்கிலம் பேசும் திறனைப் பொருத்தவரை செப்டம்பா் முதல் அதற்கான பயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளேன். இளையோா் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

முதற் சுற்றில் 2000 பேருக்கு வேலை என இலக்கு வைத்துள்ளோம். நிச்சயம் அந்த இலக்கு நிறைவேறும். அடுத்த சுற்று வேலைவாய்ப்பு முகாம் டிசம்பா் மாதத்தில் நடைபெறும். ஆண்டு முழுதும் 4 மாதங்களுக்கு ஒருமுறை இந்த வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும். இவற்றையெல்லாம் திறம்பட ஒருங்கிணைக்க உதவும் தி ரைஸ், கிவ் லைப், அறம், ஆகிய நிறுவனங்களுக்கும் நன்றியைத் தெரிவிக்கிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com