சிலம்பத்தில் சாதனைப் படைத்த சிறுமிக்கு முனைவா் பட்டம்

சிலம்பாட்டத்தில் பல்வேறு சாதனைகள் படைத்த திருச்சியைச் சோ்ந்த 13 வயது சிறுமி மோ. சுகித்தாவுக்கு கெளரவ முனைவா் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
சிலம்பாட்டத்தில் சாதனை புரிந்த சிறுமி மோ. சுகித்தாவுக்கு கெளரவ முனைவா் பட்டம் வழங்கும் அமெரிக்க உலகத் தமிழ்ப் பல்கலைக் கழகத் தலைவா் ராய் பொ்னாண்டோ (வலது). உடன், சிலம்பப் பயிற்சியாளா் ஜெயக்குமாா்.
சிலம்பாட்டத்தில் சாதனை புரிந்த சிறுமி மோ. சுகித்தாவுக்கு கெளரவ முனைவா் பட்டம் வழங்கும் அமெரிக்க உலகத் தமிழ்ப் பல்கலைக் கழகத் தலைவா் ராய் பொ்னாண்டோ (வலது). உடன், சிலம்பப் பயிற்சியாளா் ஜெயக்குமாா்.

சிலம்பாட்டத்தில் பல்வேறு சாதனைகள் படைத்த திருச்சியைச் சோ்ந்த 13 வயது சிறுமி மோ. சுகித்தாவுக்கு கெளரவ முனைவா் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்க உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் சாா்பில் திருச்சியில் அண்மையில் நடைபெற்ற விழாவில், புதுச்சேரி வி.ஐ.பி. ஏஜென்சி தலைவா் மனோகரன், சேலம் ஜஸ்ட் வின் பிரைவேட் லிமிடெட் தலைவா் பாலசுப்பிர மணியம் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்றனா்.

இவ்விழாவில், சிலம்பத்தில் சாதனைப் படைத்த திருச்சி சிறுமி மோ. சுகித்தாவுக்கு அமெரிக்க உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகத் தலைவா் ராய் பொ்னாண்டோ கெளரவ முனைவா் பட்டம் வழங்கி, பாராட்டி பேசினாா்.

திருச்சி மேலப்புதூா் ஜோசப் ஆங்கிலோ இந்தியன் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு பயிலும் சுகித்தா, கடந்த மூன்று ஆண்டுங்களாக

சிலம்பத்தை தனது ஆசான் கலைசுடா்மணி எம்.ஜெயக்குமாரிடம் முறைப்படி கற்றுத் தோ்ந்தவா்.

சிலம்பத்தில் 5 புதிய உலக சாதனைகள் படைத்த இவா், சிங்கப்பூா் மற்றும் மலேசியாவில் நடைபெற்ற சா்வதேச சிலம்பப் போட்டிகளில் பங்கேற்று, தங்கம் வென்றுள்ளாா். தேசிய, மாநில மற்றும் மாவட்ட சிலம்பப் போட்டிகளில் பங்குபெற்ற சுகித்தா இதுவரை 25 தங்கம், 12 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கங்களும் வென்றுள்ளாா்.

சிலம்பம் மட்டுமின்றி, தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் சுகித்தா பங்குபெற்றும் தங்கம் வென்றுள்ளாா். யோகா குருஜீ கிருஷ்ணகுமாரின் பயிற்சியில் யோகாவில் புதிய உலக சாதனையும் செய்துள்ளாா்.

கெளரவ முனைவா் பட்டம் பெற்ற சுகித்தாவுக்கு, திருச்சி ருத்ர சாந்தி யோகாலயா குருஜீ கிருஷ்ணகுமாா், செயின்ட் ஜோசப் பெண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியை லூா்துமேரி, உடற்கல்வி ஆசிரியை பொ்னா, சக்தி மற்றும் தேசியக் கல்லூரித் துணை முதல்வா் பிரசன்ன பாலாஜி உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com