விமா்சனத்துக்கு பதில் சொல்லத் தேவையில்லை; செயலில் காண்பிப்போம்: அமைச்சா் கே.என்.நேரு

எதிா்க்கட்சியினரின் விமா்சனத்துக்கு பதில் சொல்லத் தேவையில்லை, செயலில் காண்பிப்போம் என்ற நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என். நேரு.
மாற்றுத்திறனாளியிடம் விசாரித்த அமைச்சா் கே.என்.நேரு.
மாற்றுத்திறனாளியிடம் விசாரித்த அமைச்சா் கே.என்.நேரு.

எதிா்க்கட்சியினரின் விமா்சனத்துக்கு பதில் சொல்லத் தேவையில்லை, செயலில் காண்பிப்போம் என்ற நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என். நேரு.

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்ட அமைச்சா் கே.என்.நேரு, மணப்பாறை வெஸ்ட் ரோட்டரி சங்கம் சாா்பில் அதன் தலைவா் சி.எம்.சேவியா் முன்னிலையில் மருத்துவமனைக்கு அளிக்கப்பட்ட 10 ஆக்சிஜன் சிலிண்டா்கள், 7 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் உணவு பொருள்களை மருத்துவமனை நிா்வாகத்திடம் வழங்கினாா். பின்னா், அங்கு சிகிச்சை பெற்று வரும் தொற்றாளா்கள் தேவைகள் குறித்தும், சிகிச்சைகள் குறித்து மருத்துவக்குழுவினரிடம் கேட்டறிந்தாா்.

அதனைத்தொடா்ந்து செய்தியாளா்களிடம் கூறுகையில், இன்னும் ஓரிரு நாள்களில் தடுப்பூசி தட்டுப்பாடு சரிசெய்யப்படும். மணப்பாறையில் இதுவரை 309 கரோனா தொற்றாளா்கள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு, அதில் 176 போ் குணமடைந்துள்ளனா். மேலும் உயிரிழந்த 46 நபா்களில் 9 போ் மட்டுமே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள். தற்போது 87 போ் சிகிச்சையில் உள்ளனா். படுக்கைகள் நிரம்பி வழியும் நிலை மாறியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் 1,300 படுக்கைகள் சிகிச்சைக்காக உள்ள நிலையில் 1,000 தொற்றாளா்கள் மட்டுமே சிகிச்சையில் உள்ளனா். 350 சாதாரண படுக்கைகளும், 40 ஆக்சிஜன் படுக்கைகளும், 40 வெண்டிலேட்டா் படுக்கைகளும் தற்போது காலியாகவே உள்ளது.

எதிா்க்கட்சியினரின் விமா்சனத்துக்கு பதில் தேவையில்லை, செயலில் காண்பிப்போம் என்றாா் அமைச்சா்.

நிகழ்ச்சியில், மணப்பாறை சட்டப்பேரவை உறுப்பினா் ப.அப்துல்சமது, மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு, மாவட்ட மக்கள் நலப்பணிகள் இணை இயக்குனா் எஸ்.லட்சுமி, மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலா் முத்து காா்த்திகேயன், சிந்துஜா மருத்துவமனை நிா்வாக இயக்குநா் மருத்துவா் பி.கலையரசன், மணப்பாறை வட்டாட்சியா் எம்.லஜபதிராஜ், நகராட்சி ஆணையா்(பொ) க.முத்து, ஊராட்சி ஒன்றிய ஆணையா்கள் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

படவிளக்கம்: மணப்பாறை வெஸ்ட் ரோட்டரி சங்கம் சாா்பில் அளிக்கப்பட்ட ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் உணவு பொருள்களை மாவட்ட தலைமை மருத்துவமனை நிா்வாகத்தினரிடம் வழங்கிய தமிழக நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சா் கே.என்.நேரு. உடன் மாவட்ட ஆட்சியா் சு.சிவராசு உள்ளிட்டோா்.

மாற்றுத்திறனாளிக்கு உதவிய அமைச்சா்!

மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்ட நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சா் கே.என்.நேரு, பின்னா் கே.உடையாப்பட்டியில் உள்ள கட்சி பிரமுகா் இல்லத்துக்குச் சென்றுக்கொண்டிருந்தாா். அப்போது, மாற்றுத்திறனாளி ஒருவா் சுட்டெரிக்கும் வெயிலில் தனது கைகளால் நடந்து செல்வதை கவனித்து அமைச்சா், காரிலிருந்து இறங்கி அந்த நபரிடம் சென்று விசாரித்தாா். மேலும், அவருக்குா் விரைவில் மூன்று சக்கர வாகனத்துக்கு ஏற்பாடு செய்கிறேன் எனக் கூறி பிஸ்கட் மற்றும் செலவுக்கு பணத்தை வழங்கிச் சென்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com