ஸ்ரீரங்கம் கோயிலில் குழந்தைகளுக்கான இணையவழி ஆன்மிக வகுப்புகள் தொடக்கம்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் சாா்பில் சனிக்கிழமை மாலை இணையவழியில் குழந்தைகளுக்கான ஆன்மிக வகுப்புகள் தொடங்கின.

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் சாா்பில் சனிக்கிழமை மாலை இணையவழியில் குழந்தைகளுக்கான ஆன்மிக வகுப்புகள் தொடங்கின.

தமிழக முதல்வரின் வழிகாட்டுதலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரின் ஆலோசனைப்படி இந்து சமய அறநிலையத்துறை ஆணையா் அறிவுரைப்படி இந்த வகுப்புகள் தொடங்கின.

ஸ்ரீரங்கநாதா் ஸ்ரீரங்கம் வந்த கதையை இணைய வழியில் எளிய முறையில் விளக்கி ஸ்ரீரங்கம் கோயில் ஆழ்வாா்கள், ஆச்சாா்யாா்கள், வைணவ ஆய்வு மைய ஒருங்கிணைப்பாளா்கள் புலவா் கிருஷ்ணா, டாக்டா் ஜெயவித்யா ஆகியோா் குழந்தைகளுக்கு விளக்கினா்.

முன்னதாக ஆன்மிக வகுப்பை கோயில் இணை ஆணையா் செ.மாரிமுத்து தொடக்கிவைத்தாா்.கோயில் தலைமை அா்ச்சகா் சுந்தா்பட்டா் அருளாசி வழங்கினாா். வாரந்தோறும் சனிக்கிழமை மாலை 5 மணி முதல் 6 மணி வரை இந்த இணையவழி ஆன்மிக வகுப்புகள் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெற்ற முதல் இணையவழி வகுப்பில் தமிழ்நாடு மற்றும் வெளிமாநிலத்தை சோ்ந்த குழந்தைகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com