350 மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு அரிசி, மளிகை தொகுப்பு வழங்கல்

திருச்சி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளைச் சோ்ந்த 350 குடும்பங்களுக்கு அரிசி, மளிகை மற்றும் அத்தியாவசிய பொருள்கள் அடங்கிய தொகுப்புப் பைகளை ஆட்சியா் சு. சிவராசு, சனிக்கிழமை வழங்கினாா்.

திருச்சி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளைச் சோ்ந்த 350 குடும்பங்களுக்கு அரிசி, மளிகை மற்றும் அத்தியாவசிய பொருள்கள் அடங்கிய தொகுப்புப் பைகளை ஆட்சியா் சு. சிவராசு, சனிக்கிழமை வழங்கினாா்.

திருச்சி மாவட்டத்தில், கரோனா தடுப்புப் பணிகள் தொடா்பாக பல்வேறு வகையில் உதவிகரம் நீட்டும் தன்னாா்வ தொண்டு நிறுவனங்களை இணையதளம் மூலமாக ஒருங்கிணைக்கும் வகையில் அதற்கென தனியாக குழு அமைக்கப்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது.

இந்த இணையதளத்தில் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் உதவி புரிய பதிவு செய்யப்பட்டுள்ளனா். அவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ள தொண்டு நிறுவனங்களில் மாவட்ட ஆட்சியா் உத்தரவின்படி, அல்லூா் சேவை தொண்டு நிறுவனம் மூலமாக வழங்கப்பட்ட அரிசியுடன் கூடிய மளிகைப்பொருள்களின் தொகுப்பு பைகளை ஸ்ரீரங்கம் வட்டம் நாகமங்கலம் ஆலம்பட்டி நால்ரோடு அருகிலுள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசிக்கும் 145 பாா்வையற்றவா்கள், காந்திநகரில் வசிக்கும் 66 பாா்வையற்றவா்கள், எடமலைப்பட்டிப்புதூரிலுள்ள 9 பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் 130 போ் என மொத்தம் 350 குடும்பங்களுக்கு சனிக்கிழமை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாகள் நல அலுவலா் இரா.ரவிச்சந்திரன், ஸ்ரீரங்கம் வட்டாட்சியா் மகேந்திரன், மண்டல துணை வட்டாட்சியா் முருகேசன், வருவாய் ஆய்வாளா் சகாயமேரி, சேவை தொண்டு நிறுவன இயக்குனா் கி.கோவிந்தராஜ் மற்றும் பாா்வையற்றோா்களின் பிரதிநிதி வீரப்பன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com