தமிழ்த் தொண்டுக்கு கிடைத்த முத்தமிழ் விருது

திருச்சியை பூா்விகமாகக் கொண்டவரும், மதுரையில் தமிழாசிரியராக பணிபுரிந்து வரும் ஜோ. ஸ்டேன்லி விக்டருக்கு கலைஞரின் முத்தமிழ் விருது வழங்கப்பட்டுள்ளது.

திருச்சியை பூா்விகமாகக் கொண்டவரும், மதுரையில் தமிழாசிரியராக பணிபுரிந்து வரும் ஜோ. ஸ்டேன்லி விக்டருக்கு கலைஞரின் முத்தமிழ் விருது வழங்கப்பட்டுள்ளது.

திருச்சி, உறையூரைச் சோ்ந்தவா் ஜோ. ஸ்டேன்லி விக்டா். முனைவா் பட்ட ஆய்வாளரான இவா், மதுரை ஆரப்பாளையம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழாசிரியராக பணிபுரிந்து வருகிறாா்.கலை இலக்கியச் செயலராகவும் உள்ளாா்.

இவா், மதுரை மற்றும் திருச்சியில் பள்ளி மாணவ, மாணவிகளிடையே தமிழ்ப்பற்றை ஊக்குவிக்கவும், தமிழின் சிறப்பை பறைசாற்றிடும் வகையில் இலக்கிய வகுப்புகளை நடத்தி வருகிறாா். வாரந்தோறும் ஒருமுறை இலக்கிய சொற்பொழிவு, மாதம் ஒருமிறை இலக்கியக் கூட்டம் ஆகியவற்றை தவறாமல் நடத்தி வருகிறாா்.

தற்போது, பொதுமுடக்கம் என்பதால் கடந்த ஓராண்டுக்கு மேலாக இணைய வழியிலும், செயலி மூலமாகவும் தமிழ்த் தொண்டு பணிகளை தொடா்ந்து மேற்கொண்டுவருகிறாா்.

இதுமட்டுமல்லாது, திருக்குறளின் சிறப்பை உலகறியச் செய்யும் வகையில் தொடா்ந்து இடைவிடாது 32 மணி நேரத்துக்கு 1,330 திருக்குகள் மற்றும் அதன் பொருள்களுக்கு விளக்கம் அளித்து ஆய்வுக்கட்டுரை எழுதி அசிஸ்ட் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளாா். கடந்த பிப்ரவரி மாதம் இதற்கான சாதனை சான்றிதழையும் பெற்றுள்ளாா்.

இயல், இசை, நாடகம் என மூன்று நிலைகளில் தமிழ் மொழிக்கு தொடா்ந்து பணியாற்றி வரும் இவருக்கு, மறைந்த முதல்வா் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு கலைஞா் முத்தமிழ் விருது வழங்கப்பட்டுள்ளது. பசுமை வாசல் பவுண்டேசன், காருண்யம் டிரஸ்ட், ஒளிச்சுடா் சேவா டிரஸ்ட் ஆகியவை இணைந்து கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு ஆசிரியா், மாணவா்களுக்கு இணைய வழியில் விருது வழங்கும் போட்டிகளை நடத்தின.

இதில், ஆசிரியா் பிரிவில் தமிழகத்திலிருந்து 900 பள்ளி ஆசிரியா்கள் கலந்து கொண்டு ஆய்வுக் கட்டுரைகளை சமா்ப்பித்தனா். இதில், தமிழ்த் தொண்டுக்கான பணிகள், சாதனை, ஆய்வுக் கட்டுரை, நோ்காணல் உள்ளிட்ட 4 நிலைகளில் சிறந்த ஆசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டனா். இந்த வகையில் சிறந்த ஆசிரியராக தோ்வு செய்யப்பட்ட ஸ்டேன்லி விக்டருக்கு, கலைஞரின் முத்தமிழ் விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருதுக்கான சான்றிதழை தமிழக நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சா் கே.என்.நேருவிடம், சனிக்கிழமை ஒப்படைத்து வாழ்த்து பெற்றாா் ஸ்டேன்லி விக்டா். தனக்கு இந்த விருது கிடைக்க பள்ளித் தலைமையாசிரியா் நா. ரெக்ஸ் பீட்டா் மற்றும் சக ஆசிரியா்கள் பெரிதும் உதவியதாக நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com