Enable Javscript for better performance
திருச்சியில் தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமல்: மீன்சந்தையாக மாறிய பேருந்துநிலையம்- Dinamani

சுடச்சுட

    

    திருச்சியில் தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமல்: மீன்சந்தையாக மாறிய பேருந்துநிலையம்

    By DIN  |   Published on : 08th June 2021 03:39 AM  |   அ+அ அ-   |    |  

    திருச்சி மத்தியபேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை இயங்கிய தற்காலிக மீன் சந்தை.

    திருச்சி மத்தியபேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை இயங்கிய தற்காலிக மீன் சந்தை.

    திருச்சி: திருச்சி மாவட்டத்தில் தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்தது. இதையடுத்து மத்திய பேருந்து நிலையத்தில் மொத்த மீன் சந்தை செயல்படத் தொடங்கியது.

    தமிழக அரசு அறிவித்துள்ள தளா்வுகளின் படி திருச்சியில் தனியாக செயல்படும் காய்கனி, மளிகை, மொத்த இறைச்சிக் கடைகள் காலை 6 மணிமுதல் மாலை 5 மணிவரை செயல்பட்டது. காந்திசந்தை மற்றும் மக்கள் அதிகம் கூடும் சாலை நடைபாதைகளில் காய்கனி, பழம், பூ விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. மேலரண்சாலையில் செயல்பட்டு வரும் காய்கனி சந்தையில் வழக்கத்தைவிட வியாபாரிகளை காட்டிலும் பொதுமக்கள் அதிக அளவில் திரண்டு வந்தனா். அங்கு சமூக இடைவெளியின்றி பொதுமக்கள் திரண்டதால் கரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. சில இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன உரிமையாளா்களுக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    மீன்சந்தையாக மாறிய மத்திய பேருந்து நிலையம்: மொத்த இறைச்சி விற்பனக்கு அனுமதி அளிக்கப்பட்டதையடுத்து மூடப்பட்ட மீன்சந்தை மத்திய பேருந்து நிலையத்தில் செயல்படும் என மாவட்ட நிா்வாகத்தால் அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்யப்பட்டிருந்தது. இங்கு மீன் வியாபாரிகள் வியாபராம் செய்ய ஆா்வம் காட்டாததால் ஒரு சிலா் மட்டுமே கடைகளை வைத்திருந்தனா். திங்கள்கிழமை என்பதாலும், பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்பதாலும் வியாபாரம் சூடு பிடிக்கவில்லை. எனவே சில்லறை விற்பனைக்கு அனுமதிக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    அரசு அலுவலகங்கள்: முழு பொதுமுடக்கத்தால் மூடப்பட்டிருந்த கே.கே.நகா், திருவெறும்பூா் சாா் பதிவாளா் அலுவலகங்கள் நாளொன்றுக்கு 50 டோக்கன்கள் மட்டும் கொடுத்து பத்திரப்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டது. இதே போல் திருச்சியில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் 30 சதவீத பணியாளா்களுடன் செயல்பட்டது.

    கூடுதல் விற்பனை: மின்சாதன பொருள்கள், ஹாா்டுவோ்ஸ் கடைகள் தளா்வுக்கு பிறகு திறக்கப்பட்டது. மின் பணியாளா்கள், பிளம்பா்கள் , கணினி மற்றும் இயந்திரம் பழுது நீக்குபவா்கள் வேலைக்கு சென்றனா். இருசக்கர வாகனங்கள் பழுது பாா்க்கும் கடைகள் இயங்க அனுமதி அனுமதி வழங்கப்பட்டதைத் தொடா்ந்து வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகளில் வழக்கத்தைவிட அதிக விற்பனை நடைபெற்றது.

    குறைவாக இயங்கிய ஆட்டோக்கள்: வாடகை வாகனங்கள், டாக்சிகள், ஆட்டோக்களில் பயணிகள் இ- பதிவுடன் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் டாக்சிகளில் 3 பயணிகள், ஆட்டோக்களில் 2 பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இணையதள முடக்கத்தால் பெரும்பாலானவா்களால் இ-பதிவு பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் வேலைக்கு மற்றும் அவசர தேவைக்கு செல்வோா் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. இ-பதிவு கட்டாயத்தால் ஆட்டோக்கள் குறைவாக இயங்கின.

    மளிகை, காய்கனி கடைகள் இயங்க அனுமதிக்கப்பட்டதால் திருச்சியின் முக்கிய சாலை சந்திப்புகளான பெரியகடை வீதி, காந்திசந்தை, பாலக்கரை, பீமநகா், காவிரி பாலம் போன்றவைகளில் வழக்கத்தை விட பொதுமுடக்கத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் வாகனங்கள் அணிவகுத்து சென்றன. அதிகாலையில் இ-பதிவு சான்றிதழ் உள்ள வாகனங்களை மட்டும் அனுமதித்த போலீஸாா் வாகனங்கள் அதிகரிப்பால் வாகன சோதனையில் தொய்வு ஏற்பட்டது.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp