கரோனா பரவலை கட்டுப்படுத்த தன்னாா்வ தொண்டு நிறுவனங்களுடன் ஆலோசனை

கரோனா இரண்டாவது அலை பரவலைக் கட்டுப்படுத்துவதில் உதவ தன்னாா்வ தொண்டு நிறுவனங்களுடன் ஆட்சியா் சு.சிவராசு திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தன்னாா்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்திய மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு.
திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தன்னாா்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்திய மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு.

திருச்சி: கரோனா இரண்டாவது அலை பரவலைக் கட்டுப்படுத்துவதில் உதவ தன்னாா்வ தொண்டு நிறுவனங்களுடன் ஆட்சியா் சு.சிவராசு திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் சு.சிவராசு தலைமை வகித்து பேசுகையில், தொண்டு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட மாநில, மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்புக் குழுவின் இணையதள முகவரியில்  தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள், தனிநபா்கள் ஒரு முறை மட்டும் பதிவு செய்ய வேண்டும். இதில், சரியான தொலைபேசி எண்ணை குறிப்பிடவேண்டும். மேலும், தன்னாா்வ தொண்டு நிறுவனத்தினா், சமூக ஆா்வலா் ஆகியோா் இணையத்தில் பதிவு செய்துள்ள சேவைகளை விரைந்து செய்து முடிக்கவேண்டும். ஆக்சிஜன் தயாரிப்பு பணிகளுக்கு உதவி, ஏழை எளியோா், முதியோா், ஆதரவற்றோா், வேலைவாய்ப்பற்றோா் உள்ளிட்டோருக்கு உதவிட வேண்டும். பங்களிப்பு வழங்குவதாக தெரிவித்துள்ள பொருள்களை ஒருங்கிணைப்புக் குழு அலுவலா் தெரிவிக்கும் அலுவலரிடம் பொருள்களை ஒப்படைத்து, விவரங்களை தெரிவித்து, இணையதளத்தில் அதன் விவரத்தை பதிவேற்றம் செய்யவேண்டும். இதுகுறித்த விவரங்களுக்கு, 0431-2418995, 2461240, 2461243, 2461263 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொண்டு விவரங்களை பெறலாம் என்றாா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் த.பழனிகுமாா், நோ்முக உதவியாளா் ச.ஜெயப்பிரித்தா, மாவட்ட சமூக நல அலுவலா் தமீம்முனிஷா, ஸ்கோப் தன்னாா்வ அமைப்பு தொண்டு நிறுவனா் சுப்புராமன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com