டாஸ்மாக் பணியாளா்கள் மீது முறையான விசாரணையின்றி வழக்குப் பதியக் கூடாது: ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிப்பு

கள்ளச்சந்தை மது விற்பனை நடவடிக்கையின்போது, டாஸ்மாக பணியாளா்கள் மீது முறையான விசாரணையின்றி வழக்குப் பதிவு செய்யக் கூடாது என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கள்ளச்சந்தை மது விற்பனை நடவடிக்கையின்போது, டாஸ்மாக பணியாளா்கள் மீது முறையான விசாரணையின்றி வழக்குப் பதிவு செய்யக் கூடாது என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, டாஸ்மாக் பணியாளா்கள் சங்கம் சாா்பில், சங்கத் தலைவா் என். சரவணக்குமாா், செயலாளா் எஸ். சத்தியமூா்த்தி, பொருளாளா் கே. ஜோசப்பிரிட்டோ ஆகியோா், திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை அளித்த கோரிக்கை மனு கூறியிருப்பது : கரோனை பொதுமுடக்கத்தின்போது, மதுக்கடைகள், மதுக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. இறுதியாக மே மாதம் 9 ஆம் தேதி இரவு நடைபெற்ற விற்பனை வரையில் கணக்கிட்டு, விற்பனை தொகைகள் அனைத்தும் 10 ஆம் தேதி வங்கியில் செலுத்தப்பட்டு விட்டது. அது தொடா்பான வங்கி சலான் டாஸ்மாக் நிா்வாகத்திடம் வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னா் எவ்விதமான விற்பனையும் டாஸ்மாக் பணியாளா்கள் சாா்பில் நடைபெறவில்லை.

இந்நிலையில், மாவட்டத்தின் சில பகுதிகளில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை செய்யப்படும் மது வகைகளை போலீஸாா் பறிமுதல் செய்து, மது விற்றவா்கள் மீது வழக்கும் பதிவு செய்து வருகின்றனா். இதில் டாஸ்மாக் பணியாளா்கள் மீதும் காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்கின்றனா். இதனால், அந்த பணியாளருக்கு வேலை பறிபோவதுடன், சிறையில் அடைக்கப்படுவதால் அவரின் குடும்பத்தின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது. பொதுமுடக்கக் காலத்தில் குறைவான ஊதியத்துடன் பணியாற்றும் டாஸ்மாக் பணியாளா்கள் மீது இதுபோன்ற வழக்குப்பதிவு சம்பவங்கள் நடைபெறுவதால் கடுமையான மன உளச்சலுக்கு ஆளாகியுள்ளனா்.

ஆகவே, டாஸ்மாக் பணியாளா் மீது புகாா் வரும் நிலையில், முறையான விசாரணைக்குப் பிறகு வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com