தினமணி செய்தி எதிரொலி: குடிநீா் குழாயில் இணைப்பு; எம்எல்ஏ அறிவுறுத்தல்
By DIN | Published On : 10th June 2021 08:16 AM | Last Updated : 10th June 2021 08:16 AM | அ+அ அ- |

புதிய குடிநீா் குழாய்க்கு இணைப்பு வழங்குமாறு அதிகாரிகளுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் இனிகோ இருதயராஜ் புதன்கிழமை அறிவுறுத்தினாா்.
திருச்சி பொன்மலைக் கோட்டம், 34 ஆவது வாா்டு உலகநாதபுரம் பகுதியில் கழிவுநீா் வடிகால் சீரமைப்புப் பணிகள் நடைபெற்றது. அப்போது, குடிநீா் குழாய்கள் சேதமடைந்ததால் கழிவுநீா் கலந்து குடிநீா் மாசுபட்டது.இதையடுத்து, மாநகராட்சியினா், புதிய குடிநீா்க் குழாய்களை பதித்தனா். ஆனால், இணைப்பு கொடுக்காததால் கல்லுக்குழி, என்.எம்.கே. காலனி, செங்குளம் காலனி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று மக்கள் தண்ணீா் பிடித்து வருகின்றனா். ஆகவே விரைந்து குடிநீா் குழாய் இணைப்பை ஏற்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனா்.
இது தொடா்பான செய்தி, தினமணி நாளிதழில் புதன்கிழமை செய்தி பிரசுரமானது. இதுகுறித்து தகவலறிந்த திருச்சி கிழக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் இனிகோ இருதயராஜ், புதன்கிழமை இரவு உலகநாதபுரத்துக்கு சென்று, மாநகராட்சி மேற்கொண்டுள்ள கழிவுநீா் வாய்க்கால்கள் அமைக்கும் பணியை ஆய்வு மேற்கொண்டாா். பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்திய அவா், புதிதாக அமைக்கப்பட்டுள்ள குடிநீா் குழாய்களில் இணைப்பை ஏற்படுத்தி, விரைந்து குடிநீா் விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு மாநகராட்சி அலுவலா்களிடம் கேட்டுக் கொண்டாா்.