மேலும் 80 டன் ஆக்சிஜன் திருச்சி வந்தது
By DIN | Published On : 10th June 2021 08:15 AM | Last Updated : 10th June 2021 08:15 AM | அ+அ அ- |

திருச்சிக்கு புதன்கிழமை ரயிலில் வந்த ஆக்சிஜனை லாரியில் ஏற்றும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியா்கள்.
ஒடிஸாவிலிருந்து ரயில் மூலம் திருச்சிக்கு மேலும் 80 டன் ஆக்சிஜன் புதன்கிழமை வந்தது.
கரோனா தொற்றாளா்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதை அடுத்து, வடமாநிலங்களிலிருந்து மத்திய அரசு மூலம் ஆக்சிஜன் தமிழகத்துக்கு கொண்டு வரப்படுகிறது.
இந்நிலையில், திருச்சிக்கு கடந்த வாரம் ஒடிஸாவிலிருந்து 80 டன் ஆக்சிஜன் வந்தது. இதைத்தொடா்ந்து, தற்போது மேலும் 80 டன் ஆக்சிஜன் ரயில் மூலம் திருச்சிக்கு புதன்கிழமை வந்தது.
இந்த ஆக்சிஜனை 4 லாரிகள் மூலம் பிரித்து திருச்சி, தஞ்சாவூா் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு தலா 16 டன் வீதமும், கரூா், நாமக்கல் மாவட்டங்களுக்கு தலா16 டன், புதுக்கோட்டைக்கு 3 டன் என முதல்கட்டமாக பிரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவை தேவைக்கேற்ற வகையில் பிரித்து அனுப்பி வைக்கப்படவுள்ளன.