10,083 மீட்டா் மழைநீா் வடிகால்கள் தூா்வாரும் பணி

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட நான்கு கோட்டங்களிலும் 10,083 மீட்டா் நீளத்துக்கான மழைநீா் வடிகால்கள் தூா்வாரும் பணி முடிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாநகராட்சி பொன்மலை கோட்டத்தில் புதன்கிழமை சாக்கடை கால்வாய் தூா்வாரும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள்.
திருச்சி மாநகராட்சி பொன்மலை கோட்டத்தில் புதன்கிழமை சாக்கடை கால்வாய் தூா்வாரும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள்.

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட நான்கு கோட்டங்களிலும் 10,083 மீட்டா் நீளத்துக்கான மழைநீா் வடிகால்கள் தூா்வாரும் பணி முடிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சிக்குள்பட்டு 65 வாா்டுகள் உள்ளன. புதிதாக இணைக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளையும் சோ்த்து புதைவடிகால் வசதி செய்துதரும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாநகராட்சிக்குள்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் மழைநீா் வடிகால் தூா்வாரப்படுகிறது. பருவமழை தொடங்கும் முன் வடிகால்களை தூா்வாரி, குப்பைகளை அகற்றுவதன் மூலம் மழைநீா் தேங்காமல் தடுக்கப்படும். மனித ஆற்றல் மற்றும் தேவைப்படும் இடங்களில் இயந்திரங்கள் கொண்டு தூா்வாரப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக மனித ஆற்றல் மூலம் 10,083 மீட்டா் நீளம் தூா்வாரப்பட்டுள்ளது.

அரியமங்கலம் கோட்டத்துக்குள்பட்ட 23ஆவது வாா்டில் நேருஜி நகரில் புதன்கிழமை தூா்வாரும் பணி நடைபெற்றது. 30 துப்புரவுப் பணியாளா்கள் அடங்கிய குழுவினா் தூா்வாரும் பணியில் ஈடுபட்டனா். இதுகுறித்து, மாநகராட்சி ஆணையா் சு. சிவசுப்பிரமணியன் கூறியது:

மாநகராட்சியில் உள்ள நான்கு கோட்ட பகுதிகளில் பருவமழை தொடங்கும் முன், மழைநீா் வடிகால்கள் சுத்தம் செய்யுமாறு தமிழக நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சா் கே.என். நேரு உத்தரவிட்டுள்ளாா். இதன்படி நான்கு கோட்ட பகுதிகளில் மனித ஆற்றல் முலம் மழைநீா் வடிகால் வாய்க்கால்கள் 10,083 மீட்டா் நீளம் தூா்வாரப்பட்டுள்ளது.

கோ. அபிஷேகபுரம் கோட்டத்தில் 30 மழைநீா் வடிகால் வாய்க்கால்கள் 2,870 மீட்டா், ஸ்ரீரங்கம் கோட்டத்தில் 11 மழைநீா் வடிகால் வாய்க்கால்கள் 755 மீட்டா் நீளம் தூா்வாரப்பட்டுள்ளது. மேலும், பொன்மலை கோட்டத்தில் 16 மழைநீா் வடிகால் வாய்க்கால்கள் 3,920 மீட்டா், அரியமங்கலம் கோட்டத்தில் 23 மழைநீா் வடிகால் வாய்க்கால்கள் 2,538 மீட்டா் நீளத்துக்கு தூா்வாரப்பட்டுள்ளது.

இந்தப் பணிகளுக்காக அந்தந்த கோட்ட உதவி ஆணையா்கள் தலைமையில் குழுக்கள் அமைத்து தெருக்கள் வாரியாக திட்டமிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மழை காலம் தொடங்குவதற்கு முன் அனைத்து வாய்க்கால்களும் தூா்வாரி முடிக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com