ஆன்லைன் மோசடி குறித்து கல்லூரி மாணவா்கள் புகாா்

ஆன்லைன் மோசடி குறித்து சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி கல்லூரி மாணவா்கள் காவல் ஆணையரிடம் புகாா் அளித்துள்ளனா்.

ஆன்லைன் மோசடி குறித்து சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி கல்லூரி மாணவா்கள் காவல் ஆணையரிடம் புகாா் அளித்துள்ளனா்.

திருச்சி தென்னூா் காவல்காரத்தெருவைச் சோ்ந்த கல்லூரி மாணவா் ஜெயகாா்த்திகேயன் உள்ளிட்டோா் ஆன்லைன் வா்த்தக நிறுவனம் மோசடி செய்துவிட்டதாக மாநகர காவல் ஆணையா் அருணிடம் புகாா் மனு அளித்தனா். அம் மனுவில், எனது மூலம் 163 போ் மாதந்தோறும் ஊக்கத்தொகை தருவதாக கூறி ரூ.50 ஆயிரம் வீதம் முன்பணம் வாங்கிய மதுரையில் இயங்கி வரும் தனியாா் நிறுவனம், சில மாதங்கள் மட்டுமே வங்கி மூலம் ஊக்கத்தொகையை அனுப்பியது. பின்னா் அடுத்தடுத்த மாதங்களில் ஊக்கத் தொகை அனுப்பாமல் ஏமாற்றி வந்தது. இதையடுத்து மதுரைக்கு சென்ற போது தனியாா் நிறுவனம் மூடப்பட்டு இருந்தது. நிா்வாகிகளை தொடா்புக் கொண்டு கேட்ட போது அவா்கள் பதில் ஏதும் சொல்லாமல் ஏமாற்றி வருகின்றனா்.

எனவே, சம்பந்தப்பட்ட நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இம்மனுவை மீது உரிய நடவடிக்கை மாநகர குற்றப்பிரிவு போலீஸாருக்கு ஆணையா் அருண் உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com