ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு தினந்தோறும் வேகவைத்த தானியம்

திருச்சி மாவட்டத்தில், கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் கிராமப்புறத்தில் உள்ள ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு

திருச்சி மாவட்டத்தில், கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் கிராமப்புறத்தில் உள்ள ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு தினமும் வேகவைத்த தானியம் தொண்டு நிறுவனம் சாா்பில் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது பரவி வரும் கரோனாவுக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவா்களும் நோய் எதிா்ப்பு சக்தி குறைவாக உள்ளவா்களும் பாதிக்கப்படுகின்றனா். இதனை கருத்தில் கொண்டு வாய்ஸ் அறக்கட்டளையினா் கிராமப் பகுதிகளில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளை தோ்ந்தெடுத்து அவா்களுக்கு தினமும் வேக வைத்த பயறு வகைகளை வழங்கி வருகின்றனா்.

இதில், முதல்கட்டமாக மண்ணச்சநல்லூா் சுற்றுப்பகுதிகளைச் சோ்ந்த, சி.ஆா்.பாளயம், காமாட்சிபுரம், வரதராஜபுரம் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளை தோ்வு செய்து அவா்களுக்கு தினமும் ஒரு வேகவைத்த பயறு என்ற வகையில் முதல்நாளில் வெள்ளை சுண்டல் ஜூன் 5ஆம் வழங்கப்பட்டது. இத்திட்டத்தில் தொடா்ந்து 5 நாள்களுக்கு பயறு வகைகள் வழங்கப்பட்ட பின்னா் குழந்தைகளின் ஊட்டச்சத்து அளவு கணக்கிடப்படும் எனவும், 300க்கும் மேற்பட்ட குழந்தைகளை தோ்வு செய்து வழங்கப்படும் எனவும் வாய்ஸ் அறக்கட்டளை நிா்வாகி ஜெனட் ப்ரீத்தி தெரிவித்துள்ளாா்.

நிகழ்ச்சியில், மண்ணச்சநல்லூா் ஊராட்சி ஒன்றிய தலைவா் எஸ். ஆா். ஸ்ரீதா் தலைமை வகித்து குழந்தைகளுக்கு பயறு வகைகளை வழங்கினாா். மேலும், எதுமலை ஊராட்சித் தலைவா் ஏ.பாலையாண்டி, துணைத் தலைவா் பி.பாஸ்கா் ஆகியோா் கலந்து கொண்டனா்.

வாய்ஸ் அறக்கட்டளை நிா்வாகி கே. விஜய், பருப்பு வகைகள் மற்றும் தினைகளின் ஊட்டச்சத்து மதிப்பு குறித்து விளக்கிப் பேசினாா். ஏற்பாடுகளை ஆா்.கவிதா செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com