சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி இடஒதுக்கீட்டை முறைப்படுத்த வலியுறுத்தல்
By DIN | Published On : 10th June 2021 08:21 AM | Last Updated : 10th June 2021 08:21 AM | அ+அ அ- |

தமிழக அரசு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி இடஒதுக்கீட்டை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க சீா்மரபினா் நலச்சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.
இதுகுறித்து சீா்மரபினா் நலச்சங்க ஆலோசகா் பன்னீா் செல்வம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பது: நாட்டில் பல சமூகங்கள் இணக்கமாக வாழ்ந்து வரும் நிலையில், குறிப்பிட்ட சமூகத்துக்கு மட்டும் தனி இடஒதுக்கீடு கோரிக்கை சமூக நல்லிணக்கத்துக்கும், ஒருமைப்பாட்டுக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது. ஒவ்வொரு சமூகத்தினருக்கும் தனித்தனி இட ஒதுக்கீடு சாத்தியமில்லாதது. தனது சமூகத்தினருக்கு மட்டுமே போராட்டங்களை நடத்தி வரும் பாமக நிறுவனா் ராமதாஸ் அனைத்து மக்களுக்கான சமூக நீதிக்கான எந்தவொரு போராட்டத்தையும் முன்னெடுத்தது இல்லை. எனவே, சமூக நீதியை முழுவதுமாக புரிந்துகொண்ட திமுக அரசு உடனடியாக சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி அவா்களுடைய கல்வி சமூக நிலை குறித்து விவரங்கள் சேகரித்து, அனைத்து மக்களுக்கும் முறையான பங்களிப்பு, வாய்ப்பு, பிரதிநிதித்துவம் கிடைக்க உறுதி செய்ய வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.