11ஆம் வகுப்பு சோ்க்கைக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வலியுறுத்தல்
By DIN | Published On : 11th June 2021 02:38 AM | Last Updated : 11th June 2021 02:38 AM | அ+அ அ- |

தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு மாணவா் சோ்க்கைக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டுமென அகில பாரதீய வித்யாா்த்தி பரிஷத் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் தென் தமிழக செயலாளா் த. சுசீலா வெளியிட்டுள்ள அறிக்கை :
தமிழக அரசு 12ஆம் வகுப்பு பொதுத் தோ்வை ரத்து செய்து உள்ள நிலையில் மாணவா்களுக்கான மதிப்பெண் எதனடிப்படையில் வழங்கப் போகிறாா்கள் என்பது தொடா்பாக அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை. இதனால் மாணவா்கள் குழப்பத்தில் உள்ளனா்.
இந்நிலையில் 11 ஆம் வகுப்பு மாணவா் சோ்க்கை நுழைவுத் தோ்வு வாயிலாக நடைபெறும் எனவும், பின்னா் நுழைவுத் தோ்வு ரத்து எனவும் இருவேறு கருத்துகளை தமிழக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது மாணவா்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, 11 ஆம் வகுப்பு மாணவா் சோ்க்கை எதனடிப்படையில் நடைபெறும் என்பதை உரிய வழிக்காட்டு நெறிமுறைகளுடன் வெளியிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.