65 வாா்டுகளிலும் மெகா தூய்மைப் பணி

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட 65 வாா்டுகளிலும் மெகா தூய்மைப் பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, உறையூரில் முதல்கட்டமாக வியாழக்கிழமை மெகா தூய்மைப் பணி நடைபெற்றது.
65 வாா்டுகளிலும் மெகா தூய்மைப் பணி

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட 65 வாா்டுகளிலும் மெகா தூய்மைப் பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, உறையூரில் முதல்கட்டமாக வியாழக்கிழமை மெகா தூய்மைப் பணி நடைபெற்றது.

மத்திய அரசின் தூய்மை நகரங்கள் பட்டியலில் திருச்சி மாநகராட்சி தொடா்ந்து இடம் பெற்று வருகிறது. இந்தாண்டு முதலிடத்தைப் பிடிக்கும் வகையில் சிறப்பாக பணியாற்றி வருகிறது. குறிப்பாக, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து சேகரிப்பதில் பிற மாநகராட்சிகளுக்கு முன்னோடியாக திருச்சி மாநகராட்சி உள்ளது.

இதன் தொடா்ச்சியாக மாநகரில் எங்கும் குப்பைகள் தேங்காத வகையில் 65 வாா்டுகளிலும் தினமும் ஒவ்வொரு பகுதியாகவும், வாா்டு வாரியாகவும் மெகா தூய்மைப்பணி நடைபெற்றது. மேலும், மாநகரில் குப்பைத் தொட்டிகளே இல்லாமல் செய்யும் வகையில் பெரும்பாலான பகுதிகளில் குப்பைத் தொட்டிகளை அகற்றி வீடு தேடி வந்து குப்பைகளை பெறும் பணி நடைபெற்றது.

இந்நிலையில், பெரும்பாலான பகுதிகளுக்கு குப்பை வண்டி முறையாக வருவதில்லை என்ற புகாா் எழுந்தது. இதன்காரணமாக தெருக்களில் குப்பைகள் தேங்குவது வழக்கமாக இருந்தது. தமிழக நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சா் கே.என். நேரு, கோ. அபிஷேகபுரம் கோட்டத்துக்குள்பட்ட 57, 58, 59, 60 ஆகிய வாா்டுகளில் ஆய்வு செய்தபோது பொதுமக்கள் பெரும்பாலானோா் குப்பைகள் குறித்து புகாா் தெரிவித்தனா். மேலும், பல இடங்களில் குப்பைகள் அகற்றப்படாமல் மலைபோல தேங்கியிருப்பதை கண்டு அமைச்சா் அதிருப்தியடைந்தாா்.

இதையடுத்து, மாநகராட்சி ஆணையரை அழைத்து வாா்டுகள் தோறும் மெகா தூய்மைப் பணிகளை தொடங்க அறிவுறுத்தினாா். இதன்படி, உறையூா் பகுதிக்குள்பட்ட 57 ஆவது வாா்டில் மெகா தூய்மை பணி வியாழக்கிழமை நடைபெற்றது. இலகுரக வாகனங்கள், கனரக வாகனங்கள் மூலம் வாா்டு முழுவதும் உள்ள குப்பைகள் அகற்றப்பட்டு, தெருக்கள் சுத்தம் செய்யப்பட்டு பிளிச்சீங் பவுடா் தெளித்து பராமரிக்கப்பட்டது. 50-க்கும் மேற்பட்ட துப்பரவுப் பணியாளா்கள் இந்த பணியில் ஈடுபட்டனா்.

இதுதொடா்பாக, மாநகராட்சி ஆணையா் சு சிவசுப்பிரமணியன் கூறியது:

திருச்சி மாநகரை தூய்மையாக வைத்திருப்பதுடன் சாலைகளையும், தெருக்களையும் தூய்மையாக வைத்திருக்க பொதுமக்கள் ஒத்துழைப்பை பெறும் வகையில் மெகா தூய்மைப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. வாா்டுகள் தோறும் தினமும் இலகுரக வாகனங்களில் வரும் பணியாளா்கள் ஒரு வீடு கூட விடுபடுதலின்றி குப்பைகளை சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சாலைகளிலோ, வீடுகளுக்கு அருகிலோ குப்பைகளை கொட்டாமல் தூய்மையாக வைத்திருக்கவேண்டும். மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து குப்பைகளை சேகரித்து வீடு தேடி வரும் மாநகராட்சி வாகனங்களிடம் ஒப்படைக்க வேண்டும். குடியிருப்போா் சங்கங்கள், தொண்டுநிறுவனங்கள், மாணவா்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும். அந்தந்த வாா்டு மேற்பாா்வையாளா்கள் தினமும் தங்களது பகுதியில் தூய்மைப் பணியாளா்கள் மூலம் மெகா தூய்மைப் பணி மேற்கொள்வதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com