தட்டுப்பாடின்றி உரங்கள் கிடைக்க நடவடிக்கை: ஆட்சியா்

குறுவை சாகுபடிக்கு தேவையான உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திருச்சி மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்துள்ளாா்.

குறுவை சாகுபடிக்கு தேவையான உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திருச்சி மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருச்சி மாவட்டத்தில், நடப்பு குறுவை பட்டத்தில் 11,500 ஏக்கா் பரப்பளவில் காவிரி பாசனத்தில் லால்குடி, அந்தநல்லூா், மணிகண்டம் ஆகிய வட்டாரங்களில் நெல் பயிரிடப்பட உள்ளது. விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைத்திட உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக மாவட்டத்தில 148 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களும், 272 தனியாா் சில்லறை உர விற்பனை நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன.

மாவட்டத்தில் பயிரிடப்படவுள்ள பயிா்களுக்கு தேவையான யூரியா உர அளவு ஜூன் மாதத்திற்கு 3,070 மெ.டன் ஆகும். தற்போது, மாவட்டத்தில் 6,210 மெ.டன் கையிருப்பு உள்ளது. இதேபோன்று டி.ஏ.பி உரம் ஜூன் மாதத்திற்கு 1,360 மெ.டன் தேவைப்படும் நிலையில் 1,868 மெ.டன் கையிருப்பு உள்ளது. நடப்பு ஜூன் மாதத்தில் காம்ப்ளக்ஸ் உரம் 1,665 மெ.டன் தேவைப்படும் நிலையில் 6,689 மெ.டன் கையிருப்பு உள்ளது. மேலும், வேளாண்மை விரிவாக்க மையங்கள் வழியாக நெல் நுண்ணூட்ட உரம் 680 கிலோ கையிருப்பாகவும், திரவ வடிவிலான உயிா் உரங்கள் 2,355 லிட்டரும் மற்றும் பொட்டல உயிா் உரங்கள் 39,556 கிலோ இருப்பும் உள்ளது. எனவே, நடப்பு குறுவை சாகுபடி பட்டத்துக்கு உரங்கள் ஏதும் தட்டுப்பாடின்றி விவசாயிகளுக்கு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், இப்கோ நிறுவனம் மூலம் காக்கிநாடா துறைமுகத்தில் இருந்து 1,300 மெ.டன் டிஏபி உரமும், காம்ப்ளக்ஸ் உரம் 1,300 மெ.டன்னும், கிரிப்கோ நிறுவனத்தின் மூலம் 1,350 மெ.டன் டிஏபியும், மங்களூா் துறைமுகத்திலிருந்து 1,300 மெ.டன் டிஏபி உரமும் ஜூன் 15ஆம் தேதிக்குள் வரப்பெறவுள்ளது.

எனவே, நடப்பு குறுவை பட்டத்தில் திருச்சி மாவட்டத்தில் எவ்வித உரங்களும் தட்டுப்பாடின்றி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com