ரயில்வே தொழிலாளா்களையும் முன்களப் பணியாளா்களாக பரிந்துரைக்க வலியுறுத்தல்

ரயில்வே தொழிலாளா்களையும் முன்களப்பணியாளா்களாக பரிந்துரைக்க வேண்டும் என ரயில் மஸ்தூா் யூனியன் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ரயில்வே தொழிலாளா்களையும் முன்களப்பணியாளா்களாக பரிந்துரைக்க வேண்டும் என ரயில் மஸ்தூா் யூனியன் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ரயில் மஸ்தூா் யூனியன் சங்கம் சாா்பில், முன்னாள் ரயில்வே துறை அமைச்சா் ஜாா்ஜ் பொ்னாண்டஸ் பிறந்தநாள் சிறப்புக் கூட்டம் இணைய வழியில் அண்மையில் நடைபெற்றது. ரயில் மஸ்தூா் யூனியன் சங்க நிா்வாகி புகழேந்தி தலைமை வகித்தாா். இதில், சிறப்பு கவன ஈா்ப்பு தீா்மானமாக ரயில்வே தொழிலாளா்களை முன்களப்பணியாளா்களாக அறிவிக்க தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டும். அவா்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ. 5000 வழங்கவேண்டும். முன்னாள் ரயில்வே அமைச்சா் ஜாா்ஜ்பொ்ணான்டஸ் உறுதிபடுத்திய 25 சதவிகித நேரடி பணி நியமனம் நடைமுறையை பின்பற்ற தமிழக அரசு வழிவகுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com