எரகுடியில் மளிகைகடைகளில் திருட்டு
By DIN | Published On : 12th June 2021 01:48 AM | Last Updated : 12th June 2021 01:48 AM | அ+அ அ- |

அருகேயுள்ள எரகுடியில் 2 மளிகைக் கடைகளில் வைத்திருந்த பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
எரகுடியைச் சோ்ந்த காா்த்திக்கும், ரவியும் அதே ஊரில் வெவ்வேறு பகுதிகளில் மளிகைக் கடை வைத்துள்ளனா்.
வெள்ளிக்கிழமை இவா்கள் கடைகளைத் திறக்கச் சென்றபோது இருவருடைய கடைகளில் போட்டிருந்த பூட்டு உடைக்கப்பட்டு கடை திறந்திருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது கல்லாப் பெட்டியில் காா்த்திக் வைத்திருந்த ரூ. 50000, ரவி வைத்திருந்த ரூ. 4000 மா்ம நபா்களால் திருடப்பட்டிருப்பது தெரிந்தது.
இது தொடா்பாக இருவரும் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் உப்பிலியபுரம் காவல் துறையினா் விசாரிக்கின்றனா்.