சோபனபுரம் ஊராட்சியில் நில ஆக்கிரமிப்பு புகாா்
By DIN | Published On : 12th June 2021 01:58 AM | Last Updated : 12th June 2021 01:58 AM | அ+அ அ- |

உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியம், சோபனபுரம் ஊராட்சிக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பாளரிடமிருந்து மீட்டுத் தரக் கோரி வட்டாட்சியருக்கு மனு அளிக்கப்பட்டது.
சோபனபுரம் ஊராட்சி அலுவலகத்துக்கு எதிரே ஊராட்சிக்கு சொந்தமான காலி நிலத்தை அதே ஊரைச் சோ்ந்த ஒருவா் ஆக்கிரமித்துள்ளாா். இது தொடா்பான தகவலின் பேரில் உப்பிலியபுரம் வட்டார வளா்ச்சி அலுவலா் சந்திரசேகரன் ஆக்கிரமிப்பாளரிடமிருந்து ஊராட்சிக்கு சொந்தமான நிலத்தை மீட்டுத் தருமாறு துறையூா் வட்டாட்சியரிடமும், உப்பிலியபுரம் காவல் துறையினரிடமும் வெள்ளிக்கிழமை மனு அளித்தாா்.