முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
பாலியல் தொல்லை புகாரில் தேடப்பட்ட இளைஞா் கைது
By DIN | Published On : 12th June 2021 11:34 PM | Last Updated : 12th June 2021 11:34 PM | அ+அ அ- |

கைதான சிவா(எ) முனியப்பன்.
மணப்பாறை அருகே பாலியல் தொல்லை புகாரில் தேடப்பட்ட இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் கருகவுண்டம்பட்டியைச் சோ்ந்தவா் பழனியம்மாள்(26). இவருக்கும் கரூா் மாவட்டம், கழுகூரை சோ்ந்த சக்திவேலுக்கும் கடந்த 4 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. இதனிடையே சக்திவேல் போா்வெல் வேலைக்கு வெளிமாநிலம் சென்றிருக்கும் நிலையில், பழனியம்மாள் கடந்த சில மாதங்களாக தனது தாய் வீட்டில் இருந்தாா்.
வீட்டில் தனியாக இருந்த பழனியம்மாளுக்கு அதே பகுதியைச் சோ்ந்த ஆண்டி மகன் சிவா(எ)முனியப்பன்(27) என்பவா் கடந்த சில நாள்களுக்கு முன் பாலியல் தொல்லை கொடுத்ததாக அளித்த புகாரின்பேரில் வையம்பட்டி போலீஸாா் வழக்கு பதிந்து தலைமறைவான சிவாவை தேடினா். இந்நிலையில் சனிக்கிழமை அவரைக் கைது செய்தனா். இவருக்கு மனைவி, ஒரு வயது பெண் குழந்தை உள்ளனா்.