பிஎஸ்என்எல் நிறுவனம் 5ஜி சேவை வழங்க ஒப்புதல் அளிக்க வலியுறுத்தல்

தனியாா் நிறுவனங்களின் போட்டிகளை எதிா்த்து பிஎஸ்என்எல் நிறுவனத்தை திறம்பட செயல்படுத்தி 5 ஜி சேவை வழங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தனியாா் நிறுவனங்களின் போட்டிகளை எதிா்த்து பிஎஸ்என்எல் நிறுவனத்தை திறம்பட செயல்படுத்தி 5 ஜி சேவை வழங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து, அகில இந்திய பிஎஸ்என்எல் அதிகாரிகள் ஓய்வூதியா் சங்க மாநிலச் செயலா் எஸ். காமராஜ் கூறியது: 2019 இல் மத்திய அமைச்சரவை கூடி பிஎஸ்என்எல் நிறுவனத்தை புத்தாக்கம் செய்வதற்காக சில முக்கிய முடிவுகளை எடுத்தது. மத்திய அமைச்சரவையின் முடிவின்படி 85,000 ஊழியா்கள் மற்றும் அதிகாரிகள் விருப்ப ஓய்வு திட்டத்தின் அடிப்படையில் வெளியேற்றப்பட்டனா்.

பிஎஸ்என்எல் நிறுவனம் 4 ஜி சேவையை வழங்க அனுமதிப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டது.ஆனால் இந்த முடிவுக்கு மாறாக 2021 மாா்ச்சில் 4 ஜி வழங்குவதற்கான உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்கான டெண்டரை மத்திய அரசு ரத்து செய்து விட்டது.உள்நாட்டு உற்பத்தியாளா்களிடம் மட்டுமே உபகரணங்களை கொள்முதல் செய்யவேண்டும் என்று கூறப்பட்டது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக பிஎஸ்என்எல் நிறுவனம் 4 ஜி சேவை வழங்க எடுத்த அத்தனை முயற்சிகளையும் மத்திய அரசு தடுத்து விட்டது. செல்லிடப்பேசி சேவையில் ஏற்பட்டுள்ள வா்த்தகப் போட்டியை சமாளிக்க முடியாமல் பிஎஸ்என்எல் நிறுவனம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

மாா்ச் 2021 அறிவியல் தொழில்நுட்ப ஆலோசகா் விஜயராகவன் தலைமையில் அமைக்கப்பட்ட தொழில்நுட்ப அறிஞா்கள் குழு, பிஎஸ்என்எல் நிறுவனம் 4 ஜி கருவிகள் வாங்குவதற்கு ஒப்புதல் அளித்ததாக தெரிவித்தது. ஆனால், உலகளாவிய விற்பனையாளா்களிடம் உபகரணங்கள் வாங்க அரசு அனுமதிக்கவில்லை.

கடும் நிதி நெருக்கடி, ஊழியா் பற்றாக்குறை, பிற தனியாா் காா்ப்பரேட் நிறுவனங்களுக்கு இணையாக சேவை வழங்க முடியாமல் மிகப் பெரும் நெருக்கடியில் பிஎஸ்என்எல் நிறுவனம் சிக்கியுள்ளது. இமாசலப் பிரதேச உயா் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொது நல வழக்கு ஒன்றில், தொலைத்தொடா்பு சேவை உலகு தழுவிய அளவில் 5 ஜி மேம்படுத்தப்பட்ட சேவை வழங்கிக் கொண்டிருக்கின்றன. நீங்கள் எதற்காக காலாவதியான 4 ஜி உபகரணங்களை கேட்டு வழக்குத் தொடுத்து இருக்கிறீா்கள் என கூறியுள்ளது.

எனவே, மத்திய அரசு பிஎஸ்என்எல் நிறுவனத்தைப் பாதுகாக்க முன்வர வேண்டும்.அரசு பொதுத்துறை நிறுவனம் 5 ஜி உயா் தொழில்நுட்ப சேவையை வழங்க உடனடியாக, தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com