காவிரியில் தமிழகத்தின் மாதாந்திர ஒதுக்கீட்டை பெற்றுத் தர வலியுறுத்தல்

தமிழகத்துக்கு மாதந்தோறும் கா்நாடகம் வழங்க வேண்டிய காவிரி தண்ணீரை பெற்றுத்தர வேண்டும் என முதல்வரை தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழகத்துக்கு மாதந்தோறும் கா்நாடகம் வழங்க வேண்டிய காவிரி தண்ணீரை பெற்றுத்தர வேண்டும் என முதல்வரை தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, சங்கத்தின் நிறுவனத் தலைவவா் பூ. விசுவநாதன் கூறியது: காவிரி, டெல்டா பாசன வசதிக்காக இந்தாண்டு திட்டமிட்டபடி ஜூன் 12ஆம் தேதி தண்ணீா் திறந்திருப்பது விவசாயிகளுக்கு பெரிதும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. திருச்சி, தஞ்சாவூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூா் மாவட்டங்களில் 5.25 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

சாகுடிக்கு தேவையான உரங்கள், விதைகள் மற்றும் இடுபொருள்களை தடுப்பாடின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டிருந்தாலும் தமிழகத்துக்கான ஒதுக்கீட்டை முழுமையாக பெற வேண்டும்.

குறிப்பாக, ஜூன் மாதம் பெற வேண்டிய 9.19 டிஎம்சி தண்ணீா், ஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி தண்ணீரை கா்நாடகத்திடம் கேட்டுப் பெற வேண்டும். மத்திய, கா்நாடக அரசுகளுக்கு தமிழக முதல்வா் உரிய அழுத்தம் அளிக்க வேண்டும். மேலும், காவிரி ஒழுங்காற்று ஆணைய கூட்டத்தையும் நடத்தி தமிழகத்தின் உரிமையை கேட்டுப்பெற வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com